Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வடகொரியா ஏவுகணை சோதனை

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வடகொரியா ஏவுகணை சோதனை
வடகொரியா நேற்று முன்தினம் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்படும் இருவகை குரூஸ் ஏவுகணைகளைச் சோதித்தபோது, கிழக்குக் கடலில் பயணித்த வடகொரிய நீர்மூழ்கிக் கப்பல்

வடகொரியாவின் கிழக்குக் கடற்பகுதியில் கடந்த 14-ம் தேதி சோதனை நடைபெற்றதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவக்கூடிய இருவகை குரூஸ் ஏவுகணைகளைச் சோதித்துள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. கடற்படையின் போர்த்திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் கிழக்குக் கடற்பகுதியில் கடந்த 14-ம் தேதி சோதனை நடைபெற்றதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் இருந்து தாக்குதல் நடத்தும் அமைப்புகளின் தயார்நிலையையும், எதிரிகளின் தாக்குதலைத் தடுக்கும் திறனின் நம்பகத்தன்மையையும் மதிப்பிடுவதே இதன் நோக்கம் எனக் கூறப்பட்டுள்ளது. மூத்த ராணுவ அதிகாரிகள் சோதனையைப் பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவுகணைகள் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்டதைத் தென்கொரிய ராணுவமும் கண்டறிந்துள்ளது. ஒரு ஏவுகணை செங்குத்து ஏவுகுழாயிலிருந்தும், மற்றொன்று நீர்மூழ்கிக் குண்டுகளை ஏவும் குழாயிலிருந்தும் செலுத்தப்பட்டதாக அது தெரிவித்துள்ளது. இருப்பினும், ஏவுகணைகளை ஏவ பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலின் பெயரை வடகொரியா அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

அடுத்த மாதம் மேற்கொள்ளவுள்ள ஆசியப் பயணத்தின்போது கிம் ஜாங் உன்னைச் சந்திக்கக்கூடும் என டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தார். சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ள ஆசிய–பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டையொட்டி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் அவர் சந்திக்கவுள்ளார். எனினும், டிரம்ப்–கிம் சந்திப்பு உறுதி செய்யப்படவில்லை.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெறும் சூழலில், வடகொரியா தொடர்ந்து ஆயுதச் சோதனைகளை நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பும் கிழக்குக் கடற்பகுதியை நோக்கிப் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் செலுத்தியது. இந்த ஆண்டில் நடத்தப்பட்ட ஏவுகணைச் சோதனைகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டின் மொத்த எண்ணிக்கையை ஏற்கெனவே கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியாவை அணுஆயுத நாடாக அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும் என்று கிம் வலியுறுத்தி வருகிறார். தென்கொரியாவுடனான உறவை மேம்படுத்தும் முயற்சிகளுக்கும் அவர் சாதகமாகப் பதிலளிக்கவில்லை. கடற்படையை வலுப்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்தப்போவதாக கடந்த செப்டம்பரில் அறிவித்த கிம், எட்டு மாதங்களில் அதன் பலனை உலகுக்குக் காட்டுவதாகவும் கூறியிருந்தார்.
 

முந்தைய செய்தி
ரூ.10 கோடியில் சீரமைக்கப்பட்ட காவிரி ஆற்றுப் பாலம் திறப்பு
அடுத்த செய்தி
ஈரானுக்கு எதிராக ராட்சத வெடிகுண்டு: அமெரிக்க ராணுவம் பரிசீலனை

தொடர்புடைய செய்திகள்