மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையையொட்டி உருவான ட்ரூடி புயல் இன்று (அக்.16) அதிகாலை 3-ஆம் நிலை புயலாக வலுப்பெற்றது.
இந்தப் புயல் மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் வீசும் அளவுக்கு வலுப்பெற்றுள்ளது. தற்போது மணிக்கு 9 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக மியாமி தேசிய புயல் மையம் தெரிவித்துள்ளது.அகாபுல்கோ நகரத்திலிருந்து தென்மேற்கே 420 கி.மீ. தொலைவிலும், மான்சானில்லோ நகரத்திலிருந்து தென்கிழக்கே 590 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் புயல் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், இன்று மெக்சிகோவின் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு கடற்கரைப் பகுதிகளை நெருங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.