Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தாய்லாந்தில் டைனோசர்! 12 கோடி ஆண்டுக்கு முந்தைய கால்தடம்

தாய்லாந்தில் டைனோசர்! 12 கோடி ஆண்டுக்கு முந்தைய கால்தடம்
தாய்லாந்தில் சுற்றுலாப் பயணியால் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் உள்ள டைனோசரின் காலடித் தடம் உள்ள பாறை.

டைனோசரின் எலும்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும், அதன் கால்தடங்கள் அக்கால உயிரினங்களின் நடமாட்டத்தை அறிந்துகொள்ள முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

தாய்லாந்தில் சுற்றுலாப் பயணி ஒருவர் சாதாரணமாக எடுத்த புகைப்படம், சுமார் 12 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் கால்தடங்களைக் கண்டுபிடிக்க உதவியுள்ளது. இதையடுத்து, அந்த இடத்தைப் பாதுகாத்து ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள உடோன் தானி மாகாணத்தில் அமைந்துள்ள பூ பிரபாத் தேசியப் பூங்காவுக்கு 32 வயதான பிச்சாய் பிரதெட்சேனா என்ற சுற்றுலா பயணி குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அங்குள்ள இயற்கைப் பாதையில் ஓடையின் அருகே பாறையில் விசித்திரமான தடங்களைக் கண்டார். அவை டைனோசரின் கால்தடங்களாக இருக்கலாம் என்று சந்தேகித்த அவர், அவற்றைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.


அந்தப் புகைப்படத்தைப் பார்த்த பலரும் அது பழங்கால உயிரினத்தின் கால்தடங்களாக இருக்கலாம் எனக் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, தாய்லாந்து கனிமவளத் துறையினர் அந்த இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, பாறையில் பதிந்திருந்த ஆறு கால்தடங்களும் உண்மையான டைனோசர் கால்தடங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.


இந்தத் தடங்கள் சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தையவை என்றும், இறைச்சி உண்ணும் தெரோபோட் வகை டைனோசரால் உருவானவை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு கால்தடமும் சுமார் 29 செ.மீ. நீளமும், 26 செ.மீ. அகலமும் கொண்டுள்ளது. இந்தத் தடங்கள் மணற்கல்லில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

இந்த இடத்தில் டைனோசரின் எலும்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும், அதன் கால்தடங்கள் அக்கால உயிரினங்களின் நடமாட்டத்தை அறிந்துகொள்ள முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளன.

கால்தடங்கள் சேதமடைவதைத் தடுக்கவும், நீரோட்டத்தால் அவை அழியாமல் பாதுகாக்கவும் அந்தப் பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆய்வுகள் முடிந்த பிறகு, இந்த இடத்தை அறிவியல் கல்வி மற்றும் சுற்றுலாவுக்கான தளமாக மேம்படுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

முந்தைய செய்தி
French businesses, museums to shut amid fresh weekend protests
அடுத்த செய்தி
'EU ‘inviting disaster’ with carbon tax on steel'

தொடர்புடைய செய்திகள்