சூடான் – எகிப்து எல்லைக்கு அருகே தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 72 பேர் உயிரிழந்ததாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
சூடானின் வடக்குப் பகுதியில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. இதற்கு எகிப்து விமானப் படையே காரணம் என ‘எமர்ஜென்சி லாயர்ஸ்’ அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.எகிப்து ராணுவம் அதிகாரபூர்வமாக விளக்கமளிக்கவில்லை.சூடானில் 2023-ம் ஆண்டு முதல் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பலர் தங்கச் சுரங்கப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.