Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சைலண்ட் மோடில் பாமக; புதிய வியூகத்தில் தவெக - அதிர்ச்சியில் விசிக

சைலண்ட் மோடில் பாமக; புதிய வியூகத்தில் தவெக - அதிர்ச்சியில் விசிக

கூட்டணியை மாற்றுமா இடைத்தேர்தல் முடிவுகள்?

பகிரவும் WhatsApp Facebook

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெகவுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்திய இடதுசாரிகள், ஆட்சிக்கான ஆதரவு நிலையைத் திரும்பப் பெற்றால், பாமகவின் ஆதரவைப் பெற தவெக வியூகம் வகுத்துள்ளது. இதனால், கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக அதிர்ச்சி அடைந்துள்ளது.

சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் 107 தொகுதிகளில் வென்ற தவெக காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் மற்றும் இடதுசாரி கட்சிகளின் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இவர்களில், இடதுசாரிகள் தவெக அரசில் பங்குபெறாமல் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் நிலைப்பாட்டை எடுத்தனர்.
தவெக அரசின் மீது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விமர்சனத்தை வைத்த ‘தோழர்கள்’, கூட்டணியை வலுப்படுத்த முதல்வர் விஜய் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தனர். 


தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என அடம் பிடித்தனர்.
இதன் உச்சமாக, மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில், தங்களது வேட்பாளர்களை நிறுத்தி, எதிர்ப்பு நிலையை உறுதியாக்கினர். பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு இடைத்தேர்தலில் வாய்ப்புக் கொடுத்ததில் தொடங்கி, வாக்குக்கு தவெக பணம் கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டு வரை இடைத்தேர்தல் களத்தில் இடதுசாரிகள் எழுப்பிய விமர்சனக்குரல் தவெகவிற்கு எதிராக ஒலித்தது. இடைத்தேர்தல் முடிவுகளில் தவெக வென்ற நிலையில், இடதுசாரி வேட்பாளர்கள் மிக குறைவான வாக்குகளைப் பெற்றனர். 

இந்த நிலையில், தவெக ஆட்சிக்கான ஆதரவை இடதுசாரிகள் தொடர்வார்களா என்பது தற்போதைய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: தவெக அரசுக்கான ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து இடதுசாரிகள் விலகினால், அவர்களால் குறையும் 4 எம்எல்ஏக்களை, பாமக மூலம் சரி செய்யலாம் என்பது முதல்வர் விஜய்யின் விருப்பமாக உள்ளது. அதிமுக கூட்டணியில் வென்ற பாமக, நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்போது எதிர்த்து வாக்களிக்காமல் நடுநிலை வகித்ததில் தொடங்கி, இடைத்தேர்தலில் தங்களுக்கு நெருக்கடி கொடுக்காமல் ஒதுங்கிக் கொண்டது வரை அன்புமணியின் ‘பாசிட்டீவ் அப்ரோச்’ முதல்வருக்கு பிடித்துள்ளது.
கூட்டணிக்குள் பாமக வருமானால், விசிக வெளியேறும் நிலை ஏற்படும். விசிக எம்எல்ஏக்கள் இருவர் ஆதரவு குறைந்தால், தற்போதைய இடைத்தேர்தல் வெற்றியால் இரு எம்எல்ஏக்கள் பலத்தால் சமாளித்துக் கொள்ளலாம் என்று தவெக கருதுகிறது.அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள விசிகவின் செயல்பாடுகளில் கிடைத்த அனுபவம் மற்றும் சமீபத்தில் தவெக ஆட்சி அமைய எஸ்ஐஆர் பணிகள் காரணம் என்ற திருமாவளவனின் சமீபத்திய கருத்து போன்றவை விசிக மீதான பிடிப்பை குறைக்க காரணமாக உள்ளது.
இந்த அரசியல் சுழலைஉணர்ந்துள்ள திருமாவளவன், “தவெக கூட்டணியில் விசிகவின் முக்கியத்துவத்தை சிதைக்க பார்க்கின்றனர். இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்த பாமகவின் வாக்குகள், தவெகவிற்கு வந்ததைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர். தவெக வெற்றிக்கு விசிகவின் வாக்குகள் உதவின என்பதை வாக்குச்சாவடி வாரியாக நிரூபிக்க முடியும்” என்று விளக்கம் கொடுத்துள்ளார். காலியாக உள்ள 5 தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, தங்களது பலத்தை 114-ஆக உயர்த்திக் கொள்ளும் வரை, கூட்டணி கட்சிகளை சமாளிக்க புதிய வியூகங்களை தவெக தயாராக வைத்துள்ளது என்பதே தற்போதைய நிலையாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி
சத்துமாவு முறைகேடு: அங்கன்வாடி ஊழியர் 5 பேர் சஸ்பெண்ட்
அடுத்த செய்தி
மேடையில் வைத்து பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வைத்த 7 கோரிக்கைகள்!

தொடர்புடைய செய்திகள்