Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

‘சிபில் ஸ்கோரை’ தெரிந்து கொள்வது எப்படி?

‘சிபில் ஸ்கோரை’ தெரிந்து கொள்வது எப்படி?

பொதுவாக 750-க்கு மேல் சிபில் ஸ்கோர் இருந்தால், கடன் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

பகிரவும் WhatsApp Facebook

வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் அல்லது கிரெடிட் கார்டு பெற விண்ணப்பிக்கும்போது, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் முதலில் கவனிப்பது சிபில் (CIBIL) ஸ்கோர் ஆகும். 300 முதல் 900 வரை சிபில் ஸ்கோர் வழங்கப்படுகிறது. பொதுவாக 750-க்கு மேல் சிபில் ஸ்கோர் இருந்தால், கடன் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

சிபில் என்பதன் விரிவாக்கம் (Credit Information Bureau (India) Limited) ஆகும். 2000-ம் ஆண்டு இந்தியாவின் முதல் கடன் தகவல் நிறுவனமாக தொடங்கப்பட்ட இது, தற்போது டிரான்ஸ்யூனியன் சிபில் (TransUnion CIBIL) என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.


இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான தகவல்களைச் சேகரித்து, ஒவ்வொரு வாடிக்கையாளரின் முந்தைய கடன் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு சிபில் ஸ்கோர் கணக்கிடப்படுகிறது.


கடன் தவணைகளை (EMI) சரியான நேரத்தில் செலுத்தியது, கிரெடிட் கார்டு பயன்பாட்டு அளவு, கடந்த காலக் கடன்களைத் திருப்பிச் செலுத்தியதில் ஏற்பட்ட காலதாமதம், எந்தெந்த காரணங்களுக்காக கடன்கள் பெறப்பட்டன, புதிய கடன்களுக்கு அடிக்கடி விண்ணப்பித்துள்ளதா என்பது உள்ளிட்ட காரணிகள் சிபில் ஸ்கோர் கணக்கிடப்படுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.


இஎம்ஐ அல்லது கிரெடிட் கார்டு தவணைகளைத் தாமதமாகச் செலுத்துதல், பல்வேறு வகையான கடன்களை வெவ்வேறு வங்கிகளில் பெறுதல் உள்ளிட்டவை சிபில் ஸ்கோரைக் குறைக்கும் முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.


இதுவரை எந்தக் கடனும் வாங்காத அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தாதவர்களுக்கு பதிவுகள் இல்லை (No History) என்று குறிப்பிடப்படும். இது குறைவான மதிப்பெண் அல்ல. கடன் வாங்கவில்லை என்பதைக் குறிக்கிறது. தற்போதைய சூழலில், சிபில் ஸ்கோர் என்பது சாதாரண எண் மட்டுமல்ல. அது ஒருவரின் நிதி ஒழுக்கம் மற்றும் கடன் தகுதியை நிர்ணயிக்கும் முக்கியமான அளவுகோலாக மாறியுள்ளது.


எனவே, கடன் வசதிகளைப் பொறுப்புடன் பயன்படுத்தி, சிபில் ஸ்கோரைச் சிறப்பாகப் பராமரிப்பது எதிர்கால நிதித் தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்ய உதவும் என நிதி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


https://myscore.cibil.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேவையான விவரங்களை உள்ளீடு செய்து சிபில் ஸ்கோர் மற்றும் கிரெடிட் அறிக்கையை தெரிந்து கொள்ளலாம். சிபில் தளத்தில் இலவசமாக ஆண்டுக்கு ஒருமுறை ஸ்கோர் மற்றும் கிரெடிட் அறிக்கையைப் பெறும் வசதியும் வழங்கப்படுகிறது.

முந்தைய செய்தி
இண்டிகோ விமானக் கட்டணம் உயர்வு - எவ்வளவு பாருங்க..
அடுத்த செய்தி
சுவிட்சர்லாந்து அதிபருடன் இந்தியா போட்ட ஒப்பந்தம் - விளக்கிய பிரதமர் மோடி

தொடர்புடைய செய்திகள்