Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

திருவள்ளூரில் பெண்களுக்கு வாழ்வாதார வாய்ப்பு

திருவள்ளூரில் பெண்களுக்கு வாழ்வாதார வாய்ப்பு
சூரிய உலர்த்தியுடன் பெண்கள்.

இதன் மூலம் ஆண்டுதோறும் 15 கிராமங்களைச் சேர்ந்த 350 முதல் 400 பெண்களிடம் இத்தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

வேளாண் விளைபொருள்களைப் பதப்படுத்தி, மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றுவதன் மூலம் பெண்களுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் பிளஸ் அட்வான்ஸ்டு டெக்னாலஜீஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

ஹரியானாவை தலைமையிடமாக கொண்டு வெப்ப ஆற்றல் சேமிப்பு, சிறப்பு பாலிமர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பிளஸ் அட்வான்ஸ்டு டெக்னாலஜீஸ், அத்வித் அறக்கட்டளையுடன் இணைந்து, திருவள்ளூர் உமையாள் ஆச்சி சமூக சுகாதார மையத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.இதன் ஒரு பகுதியாக, சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பெண்களுக்கு சூரிய ஆற்றல் மூலம் வேளாண் விளைபொருள்களை உலர்த்துவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட விரைவில் கெட்டுப்போகும் பொருள்களைப் பாதுகாக்க, வெப்ப ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான சூரிய ஆற்றல் குளிர்பதனக் கிடங்கு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 15 கிராமங்களைச் சேர்ந்த 350 முதல் 400 பெண்களிடம் இத்தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விளைபொருள்கள் அறுவடைக்குப் பிறகு வீணாவதைக் குறைப்பதுடன், அவற்றைப் பதப்படுத்தி மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளையும் இத்திட்டம் உருவாக்குகிறது.

இதுகுறித்து பிளஸ் அட்வான்ஸ்டு டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சமித் ஜெயின் கூறுகையில், தொழில்நுட்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்துவதுடன், உள்ளூர் மக்களின் பங்கேற்பையும் சந்தை வாய்ப்புகளையும் இணைக்கும்போது, அது சமூகத்தில் நீடித்த மாற்றத்தை ஏற்படுத்தும். சூரிய உலர்த்தி மற்றும் சூரிய ஆற்றலில் இயங்கும் குளிர்பதன வசதிகள் மூலம் பெண்கள் உணவுப் பதப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான திறன்களைப் பெற்று, நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றார்.

முந்தைய செய்தி
Job fair in Namakkal on Friday
அடுத்த செய்தி
Sanitation workers return five sovereigns of gold

தொடர்புடைய செய்திகள்