Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு தடை - எலான் மஸ்க் பகிரங்க குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு தடை - எலான் மஸ்க் பகிரங்க குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் விடுத்த கோரிக்கைக்குப் பதிலளித்த மஸ்க், இந்த தடையை இந்திய மக்களுக்கு எதிரான குற்றம் என விமர்சித்தார்.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை தொடங்குவதைச் சில செல்வாக்குமிக்க தொழிலதிபர்கள் தடுத்து வருவதாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார். இந்திய மக்களிடம் தங்களது ஏகபோக ஆதிக்கத்தைத் தொடர்வதற்காக அவர்கள் இவ்வாறு செயல்படுவதாக அவர் கூறியுள்ளார்.

ஸ்டார்லிங்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் விடுத்த கோரிக்கைக்குப் பதிலளித்த மஸ்க், இந்த தடையை இந்திய மக்களுக்கு எதிரான குற்றம் என விமர்சித்தார். எனினும், தனது குற்றச்சாட்டில் எந்தத் தொழிலதிபரின் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. இந்தியாவில் சேவையைத் தொடங்குவதற்கான அனுமதிகளைப் பெற ஸ்பேஸ்எக்ஸ் பல ஆண்டுகளாக முயன்று வருகிறது. தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து செயற்கைக்கோள் தகவல்தொடர்பு சேவைக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளபோதிலும், செயல்பாட்டுக்குத் தேவையான பாதுகாப்பு அனுமதிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

பாதுகாப்பு விதிகளின்படி, வெளிநாடுகளில் வாங்கப்பட்ட ஸ்டார்லிங்க் சாதனங்கள் இந்தியாவில் செயல்படாதவாறும், இந்தியாவில் விற்கப்பட்ட சாதனங்கள் வெளிநாடுகளில் செயல்படாதவாறும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகளுக்குப் பொருந்தும் கண்காணிப்பு நிபந்தனைகளும் நிறுவனத்துக்குப் பொருந்தும்.
இதனிடையே, செயற்கைக்கோள் அலைக்கற்றையை, ஏலத்துக்குப் பதிலாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் நிர்வாக முறையில் ஒதுக்குவதற்குத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. 2012-ம் ஆண்டின் உச்ச நீதிமன்ற 2ஜி அலைக்கற்றை தீர்ப்பு இத்தகைய ஒதுக்கீட்டை அனுமதிக்காது என ரிலையன்ஸ் ஜியோ வாதிடுகிறது. இதுதொடர்பான சட்டக் கருத்துகளையும் மத்திய அரசுக்கு அந்த நிறுவனம் அனுப்பியுள்ளது.

இந்தியாவில் 2027-ம் ஆண்டுக்குள் ஸ்டார்லிங்க் சேவை செயல்பாட்டுக்கு வரும் என நம்புவதாக நிறுவனத்தின் வர்த்தகச் செயல்பாடுகளுக்கான துணைத் தலைவர் லாரன் ட்ரேயர் தெரிவித்த சில மணி நேரங்களில் மஸ்க் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பேசிய ட்ரேயர், டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார். இணைய வசதியற்ற மக்களைப் பின்தங்கச் செய்யும் வளர்ச்சி அணுகுமுறையைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் நீக்கம் - அதிரடி தளர்வுகள்
அடுத்த செய்தி
வைர நகைகளை விற்பனை செய்யும் ஸினாராவுக்கு ரூ.3.61 கோடி முதலீடு

தொடர்புடைய செய்திகள்