Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் நீக்கம் - அதிரடி தளர்வுகள்

ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் நீக்கம் - அதிரடி தளர்வுகள்

ஜிஎஸ்டி விதிமுறைகளில் அமலாக்கம், வரி செலுத்துவோர் இணக்கத்தை எளிதாக்கும் வகையில் பல்வேறு முக்கிய மாற்றங்களை கொண்டுவர கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு இருந்த கைது செய்யும் அதிகாரத்தை நீக்குவதுடன், வழக்குத் தொடருவதற்கான வரி மோசடி தொகையை ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் நேற்று 57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில், ஜிஎஸ்டி விதிமுறைகளில் அமலாக்கம், வரி செலுத்துவோர் இணக்கத்தை எளிதாக்கும் வகையில் பல்வேறு முக்கிய மாற்றங்களை கொண்டுவர கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.


இதன்படி, ஜிஎஸ்டி வழக்குகளில் கைது செய்யும் அதிகாரத்தை நீக்கவும், வழக்குத் தொடர்வதற்கான குறைந்தபட்ச வரி மோசடி வரம்பை ரூ.5 கோடியாக உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுவான அபராதத்தை ரூ.25,000-ல் இருந்து ரூ.10,000-ஆக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.10,000 அல்லது அதற்கும் குறைவான தொகை தொடர்பான விவகாரங்களில் வரி செலுத்துவோருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டாம் என்றும் கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.


சரக்குகளின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில், பொருட்களை ஆய்வு செய்தல், தடுத்து நிறுத்துதல் அல்லது பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகளை இனி சரக்கு அனுப்பும் மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரி அல்லது சரக்கு சென்றடையும் மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரி மட்டுமே மேற்கொள்ள முடியும்.


ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்வதில் தாமதம், சிறிய தவறுகள் அல்லது வரி செலுத்துவதில் ஏற்படும் தாமதம் போன்றவற்றுக்கு, வரி வசூல், வட்டி மற்றும் குற்றத்துக்கு ஏற்ற விகிதாசார அபராதம் மட்டுமே விதிக்கப்படும். இதற்கு மேலாக கூடுதல் தண்டனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது. மேலும், ஜிஎஸ்டி தொடர்பான குற்றங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச தண்டனையும் நீக்கப்பட்டுள்ளது. இனி அபராதம், சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிப்பது தொடர்பான இறுதி முடிவு நீதிமன்றத்தின் விருப்பத்துக்கு விடப்படும்.


மேலும், ஆன்லைன் வர்த்தக தளங்கள் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் சிறு வணிகர்களுக்கான ஜிஎஸ்டி பதிவு நடைமுறையை எளிமைப்படுத்த ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, பல்வேறு மாநிலங்களில் பொருட்களை விற்பனை செய்யும் சிறு விற்பனையாளர்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக வணிக இடத்தை அமைக்க வேண்டிய அவசியம் இருக்காது.

 இதன் மூலம் சிறு வணிகர்கள் கூடுதல் செலவு மற்றும் நிர்வாகச் சுமையின்றி ஆன்லைன் வர்த்தக தளங்களில் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய முடியும். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள அனைத்து சீர்திருத்தங்களும் வரும் 2027 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
இ-பைக் வாங்கப்போறீங்களா? இந்தியாவில் வருகிறது 50 ஷோரூம்
அடுத்த செய்தி
ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு தடை - எலான் மஸ்க் பகிரங்க குற்றச்சாட்டு

தொடர்புடைய செய்திகள்