Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கனடா எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

கனடா எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200 எழுத்தாளர்களின் பெயர்கள் இலக்கிய நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டன.

பகிரவும் WhatsApp Facebook

இலக்கியத்துக்கான நோபல் பரிசு கனடா எழுத்தாளர் ஆனி கார்சனுக்கு (76) அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, இலக்கியத்துக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200 எழுத்தாளர்களின் பெயர்கள் இலக்கிய நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டன.


 அவற்றிலிருந்து 20 பேரின் பெயர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன. பின்னர், கனடாவை சேர்ந்த எழுத்தாளர் ஆனி கார்சனுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.
நோபல் பரிசு கமிட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆனி கார்சனின் எழுத்துகள் புதுமை, நகைச்சுவை நிறைந்தவை. நவீன இலக்கியத்தில் புதிய பாணிகளை அறிமுகம் செய்தவர். 

கவிதை, மொழிபெயர்ப்பில் அவரது பங்களிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. வாழ்வியல் தத்துவங்களை தெளிவாக விளக்கும் வகையில் அவரது படைப்புகள் அமைந்துள்ளன. குறிப்பாக, கிரேக்க, லத்தீன் இலக்கியங்களை புதுமையாக சமர்ப்பித்துள்ளார். கவிதை, கதை, நாடக இலக்கியங்கள் அவரது படைப்புகளில் ஒன்றிணைந்துள்ளன. மேலும், முக்கிய வார்த்தைகள் தோன்றிய விதம், அவற்றின் அர்த்தம் குறித்தும் அவர் விளக்கியுள்ளார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1998-ல் ஆனி கார்சன் வெளியிட்ட `ஆட்டோபயோகிராபி ஆப் ரெட்' என்ற நாவல் அவரது சிறந்த படைப்பாக போற்றப்படுகிறது. கிரேக்கத்தின் 10 பண்டையகால தொகுப்புகளையும் அவர் மொழிமாற்றம் செய்திருக்கிறார். 20-க்கும் மேற்பட்ட கவிதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இந்தப் படைப்புகளுக்காக அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

முந்தைய செய்தி
'Revitalization of UNGA should be part of broader UN reforms'
அடுத்த செய்தி
ஆயுத பூஜை - பொரி மூட்டைக்கு ரூ.50 உயர்வு

தொடர்புடைய செய்திகள்