பிரான்ஸில் கலவரத்தின்போது கடைகளில் திருடப்பட்ட பொருட்களை இணையத்தில் மறுவிற்பனை செய்வதைத் தடுக்க, விற்பனைத் தளங்களுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரான்ஸில் அக்டோபர் 17-ம் தேதி ஏற்பட்ட கலவரத்தின்போது 3,000-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் சேதமடைந்தன. பல கடைகளில் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.இவற்றில் திருடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பொருட்கள் இணையத்தில் விற்பனைக்கு வந்ததைத் தொடர்ந்து, அவற்றை உடனடியாக நீக்குமாறு டிஜிட்டல் துறை அமைச்சர் ஆனி லெ ஹெனாஃப் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக விண்டெட், அமேசான், ஈபே, டிக்டாக் உள்ளிட்ட ஆறு இணையதள நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அரசு ஆலோசனை நடத்தியது. திருட்டுப் பொருட்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.