Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

திமிங்கிலங்களின் வருகையால் களைகட்டும் சுற்றுலா

திமிங்கிலங்களின் வருகையால் களைகட்டும் சுற்றுலா

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக திமிங்கிலங்களைக் காண முடிகிறது.

பகிரவும் WhatsApp Facebook

அண்டார்டிகாவின் குளிர்ந்த கடல் பகுதிகளிலிருந்து தென்னாப்பிரிக்க கடற்கரைக்கு வந்துள்ள தெற்கு ரைட் திமிங்கிலங்கள், சுற்றுலாப் பயணிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன. அவற்றின் வருடாந்திர வருகையால், வாக்கர் விரிகுடாவை ஒட்டிய ஹெர்மானஸ் நகரில் சுற்றுலா களைகட்டியுள்ளது.

கரைக்கு அருகிலேயே திமிங்கிலங்களைக் காண முடிவது இந்நகரின் சிறப்பம்சமாகும். கடலை நோக்கிக் காத்திருக்கும் பார்வையாளர்கள், அவை நீரிலிருந்து மேலெழுந்து துள்ளும்போது ஆரவாரம் செய்கின்றனர். சிலர் படகுகளில் சென்று அவற்றைக் கண்டு ரசிக்கின்றனர். புதிதாகப் பிறந்த குட்டிகளைக் காணும் வாய்ப்பும் பயணிகளுக்குக் கிடைக்கிறது.


திமிங்கிலங்கள் தென்படுவதைப் பார்வையாளர்களுக்கு அறிவிக்கும் பணியில் சிலேஸ் குகு ஈடுபட்டுள்ளார். கடற்கரைப் பாறைகள் வழியாக நடந்து அவற்றைத் தேடும் அவர், திமிங்கிலம் தென்பட்டதும் கடற்பாசியால் செய்யப்பட்ட பெரிய கொம்பை ஊதி தகவல் தெரிவிக்கிறார். கொம்பொலி கேட்டதும், பார்வையாளர்களின் கவனம் விரிகுடாவை நோக்கித் திரும்புகிறது.


“கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக திமிங்கிலங்களைக் காண முடிகிறது. அண்மையில் ஒரே நாளில் சுமார் 25 திமிங்கிலங்களைப் பார்த்தேன். அவை அனைத்தும் துள்ளியதால், எதைப் புகைப்படம் எடுப்பது என்றே தெரியவில்லை” என்று குகு மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கேப் டவுனிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹெர்மானஸ், நகர வாழ்க்கையிலிருந்து ஓய்வு தேடி வருவோரையும் ஈர்க்கிறது. ஆண்டுதோறும் ஜூன் முதல் நவம்பர் வரை திமிங்கிலங்கள் இப்பகுதிக்கு வருகின்றன. இனப்பெருக்கம் செய்வதற்கும், குட்டிகளை ஈன்று வளர்ப்பதற்கும் இந்தக் கடல் பகுதியைப் பயன்படுத்துகின்றன.


வாக்கர் விரிகுடாவில் இயற்கையான வேட்டையாடிகள் குறைவாக இருப்பதால், திமிங்கிலங்கள் குட்டிகளை வளர்க்க ஏற்ற சூழல் நிலவுகிறது. அவற்றின் வருகையையொட்டி உள்ளாட்சி நிர்வாகம் ஆண்டுதோறும் திமிங்கிலத் திருவிழாவையும் நடத்துகிறது.
வணிக வேட்டையால் ஒருகாலத்தில் எண்ணிக்கை குறைந்த தெற்கு ரைட் திமிங்கிலங்கள், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளால் மீண்டு வருகின்றன. அவற்றின் வருடாந்திர வருகை, ஹெர்மானஸ் நகரின் சுற்றுலாவுக்கும் முக்கியப் பங்காற்றுகிறது.


பருவம் முடிந்ததும் திமிங்கிலங்கள் மீண்டும் அண்டார்டிகாவின் குளிர்ந்த கடல் பகுதிகளுக்குத் திரும்புகின்றன. அதுவரை, கடலில் அவை நிகழ்த்தும் ஒவ்வொரு துள்ளலும் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைகிறது.

முந்தைய செய்தி
Diversion of trains in Madurai division
அடுத்த செய்தி
வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் - நாடுகள் வலியுறுத்தல்

தொடர்புடைய செய்திகள்