பிரான்ஸில் வார இறுதியில் வெடித்த கலவரங்களைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பாரிஸில் அமைதி திரும்பியது.
விலைவாசி உயர்வு, பள்ளிகளில் மோசமான வசதிகளைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்களில் வாகனங்கள், பொதுக் கட்டடங்களுக்குத் தீவைக்கப்பட்டன. கடைகளும் சூறையாடப்பட்டன.
நாடு முழுவதும் சுமார் 2,500 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 149 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக நீதித்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மானின் தெரிவித்தார்.
தேவையான பகுதிகளில் ஊரடங்கு தொடரும் என பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு அறிவித்தார். கலவரங்கள் மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற விசாரணை நடத்தப்படவுள்ளது.இதன் முடிவுகள் ஆண்டிறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரிஸில் மட்டும் சுமார் 300 பேர் வழக்குரைஞர்கள் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். கலவரக்காரர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.