Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வீழ்ச்சியடையும் உப்பு விலை: உற்பத்தியும் நிறுத்தம்: காரணம் இதுதான்

வீழ்ச்சியடையும் உப்பு விலை: உற்பத்தியும் நிறுத்தம்: காரணம் இதுதான்
வேதாரண்யம் பகுதியில் உப்பளத்தில் தேங்கியுள்ள மழை நீர்

கடந்த ஆண்டு உற்பத்தி குறைவாக இருந்தாலும் ஒரு டன் ரூ.1,300-லிருந்து ரூ.1,500 வரை விற்பனையானது நடப்பாண்டு உப்பு விலை பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், உப்பு விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 2 தனியார் பெரிய நிறுவனங்களால் 6 ஆயிரம் ஏக்கரிலும், சிறு, குறு உற்பத்தியாளர்கள் 800 பேரால் 3,000 ஏக்கர் என மொத்தம் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடக்கிறது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக வேதாரண்யம் உப்பு உற்பத்தியில் 2-ம் இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 1.75 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு தொடர்மழை மற்றும் பருவம் தப்பிய மழை உள்ளிட்ட காரணத்தால், உப்பு உற்பத்தி பெரும் பின்னடைவை சந்தித்து, மொத்த உற்பத்தியில் 40 சதவீத்தை கூட எட்ட முடியவில்லை. இதனால் உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் பெரும் இழப்பை சந்தித்தனர். இந்த ஆண்டு உப்பு உற்பத்தி தொடங்கியபோது, அவ்வப்போது பெய்த மழை பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், உற்பத்திக்கு முக்கிய ஆதாரமான வெயில் 100 டிகிரி செல்சியஸ்க்கும் மேலாக இருந்ததால் உற்பத்தி பணிகள் தீவிரமடைந்தன. இதனால், 6 லட்சம் டன் உற்பத்தி என்ற சாதனை அளவை எட்டியுள்ளதாக சிறு, குறு உற்பத்தியாளர் கூட்டமைப்புச் செயலாளர் செந்தில் தெரிவித்துள்ளார். இந்த சாதனை அளவு உற்பத்தி மகிழ்ச்சியளிக்கும் விஷயம் என்றாலும், தற்போது நிலவி வரும் விலை வீழ்ச்சி பெரும் தலைவலியாக மாறி உள்ளது.

கடந்த ஆண்டு உற்பத்தி குறைவாக இருந்தாலும் ஒரு டன் ரூ.1,300-லிருந்து ரூ.1,500 வரை விற்பனையானது நடப்பாண்டு உப்பு விலை பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒரு டன் உப்பு உற்பத்தி செய்ய ரூ.675 வரை செலவாகும் என கூறப்படும் நிலையில், தற்போது உற்பத்தி விலைக்கே விற்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி, மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுவதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வேதாரண்யம் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் நடப்பாண்டுக்கான உப்பு உற்பத்தி நிறைவடைந்துள்ளது. இனி அடுத்த ஆண்டு ஜனவரிக்குப் பிறகே மீண்டும் உற்பத்திப் பணிகள் தொடங்கும். தற்போது உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். எனவே, அரசு வழங்கும் மழைக்கால நிவாரணத் தொகையை உயர்த்தி, உடனடியாக வழங்க வேண்டும் என்று உப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

முந்தைய செய்தி
Insurers invest under 2% in alternatives
அடுத்த செய்தி
Flight-ல போறீங்களா? இந்த 'Power Bank'-க்கு இனி No Entry!

தொடர்புடைய செய்திகள்