Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தொழில் துறையை வழிநடத்த தெரியாத முதல்வர் விஜய்?: ஜிஎஸ்டி வருவாயை காரணம் காட்டும் நயினார்!

தொழில் துறையை வழிநடத்த தெரியாத முதல்வர் விஜய்?: ஜிஎஸ்டி வருவாயை காரணம் காட்டும் நயினார்!
நயினார் நாகேந்திரன்

தொழில் துறையையும், வர்த்தகத்தையும் வழிநடத்த தெரியாத முதல்வர் விஜய்யின் அனுபவமின்மையே இந்த தொடர் ஜிஎஸ்டி வீழ்ச்சிக்கு நேரடிக் காரணம்.

பகிரவும் WhatsApp Facebook

தொடர்ந்து 3 மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்களை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் ஜிஎஸ்டி வருவாயுடன் ஒப்பிடுகையில், உத்தரப் பிரதேசம் 18 சதவீதமும், குஜராத் 17 சதவீதமும், கர்நாடகா 16 சதவீதமும், மகாராஷ்டிரா 15 சதவீதமும் கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளன.
ஆனால், தவெக ஆட்சியில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் தலா ஒரு சதவீதமும், செப்டம்பர் மாதம் 5 சதவீதமும் ஜிஎஸ்டி வரி வருவாய் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

இதர மாநிலங்கள் ஜிஎஸ்டி வருவாயில் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், தமிழகத்தில் தொடர்ச்சியாக 3 மாதங்களாக வருவாய் வீழ்ச்சியடைந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
தொழில் துறையையும், வர்த்தகத்தையும் வழிநடத்த தெரியாத முதல்வர் விஜய்யின் அனுபவமின்மையே இந்த தொடர் ஜிஎஸ்டி வீழ்ச்சிக்கு நேரடிக் காரணம். 

அரசுக்கு வருமானத்தை ஈட்டவும், நிதி நிர்வாகத்தைச் சரியாகக் கையாளவும் அரசுக்கு திறனில்லை என்பது இதில் இருந்து தெளிவாகிறது. எனவே, மாநிலப் பொருளாதாரத்தைப் பாழ்படுத்திய தவெக அரசு, தொடர்ந்து 3 மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்களை உடனடியாக வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


முந்தைய செய்தி
ரூ.425 கோடி முதலீட்டைத் திரட்டி கெத்து காட்டும் மை டிவிஎஸ்
அடுத்த செய்தி
நைஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து: 32 பேர் உயிரிழப்பு

தொடர்புடைய செய்திகள்