Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி

தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் ஜம்மு காஷ்மீரில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்படும்போது, அமைதிப் பூங்கா என்று சொல்லப்படும் தமிழகத்தில் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது?

பகிரவும் WhatsApp Facebook

தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் ஜம்மு காஷ்மீரில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்படும்போது, அமைதிப் பூங்காவான தமிழகத்தில் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என தமிழக காவல் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாநிலச் செயலாளர் ஜெகதீசன் தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழகம் முழுவதும் அம்பேத்கர், விவேகானந்தர் ஆகியோரின் பொன்மொழிகளை விளக்கியும், மக்களிடம் சமூக ஒருமைப்பாட்டை வலியுறுத்தியும், விஜயதசமி பண்டிகையின்போது பல ஆண்டுகளாக ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, இந்த ஆண்டும் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி டிஜிபியிடம் விண்ணப்பம் அளித்தும், எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே, ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்குமாறு உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, ஒவ்வோர் ஆண்டும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

காவல் துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அனுமதி கோரி 21 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டுமென்ற விதி இருக்கும் நிலையில், அக்டோபர் 3-ம் தேதிதான் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மனுதாரர் கேட்கும் வழித்தடத்தில் அனுமதி அளித்தால் மக்களுக்கு அசெளகரியம் ஏற்படும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, "ஒவ்வோர் ஆண்டும் ஆர்எஸ்எஸ் ஊர்வலதுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தும், ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது? எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தவெக ஆட்சியில் திக, திமுக, அதிமுக, ஆர்எஸ்எஸ் என அனைவருக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது.

தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் ஜம்மு காஷ்மீரில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்படும்போது, அமைதிப் பூங்கா என்று சொல்லப்படும் தமிழகத்தில் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது? அனுமதியை மறுத்து, தேவையற்ற விளம்பரத்தை அரசு ஏற்படுத்தி தருகிறது" என்றார். மேலும், வழக்கை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

முந்தைய செய்தி
யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு பயிற்சி: இடஒதுக்கீட்டு விதிகளின்படி கலந்தாய்வு
அடுத்த செய்தி
டிரான்ஸ்ரெயில் லைட்டிங்குக்கு புதிய ஒப்பந்தங்கள்: பங்குகள் வர்த்தகத்தில் ஏற்றம்

தொடர்புடைய செய்திகள்