Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மதி சந்தை இணையதளம் முடக்கம் - திக்குமுக்காடும் மகளிர்

மதி சந்தை இணையதளம் முடக்கம் - திக்குமுக்காடும் மகளிர்

மதிசந்தை இணையதளத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மகளிர் சுய உதவிக்குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

சென்னை:

மதி சந்தை இணையதளம், தற்காலிகமாக முடக்கி இருப்பதால், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை நேரில் விற்பனை செய்வதற்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதி அனுபவ அங்காடி செயல்பட்டு வருகிறது.


 இதேபோன்று, மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கும் தயாரிப்புகளை இணைய வழியில் விற்பனை செய்வதற்காக, கடந்த 2023-ல் மதி சந்தை இணையதளம் தொடங்கப்பட்டது. அப்போதைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதை தொடங்கி வைத்தார்.

இந்த தளத்தில் வீட்டின் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், சோப்பு, தேன், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றுடன், பாரம்பரிய கைவினைத்திறன், உயர்தரத்தன்மை மற்றும் தனிச்சிறப்பை முன்னிறுத்தும் பொருட்கள், இணையதளத்தில், சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. கடந்தாண்டு ஜனவரி வரை மதி சந்தை இணையதளம் முழு வீச்சில் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது தற்காலிகமாக முடங்கி உள்ளது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் விரைந்து செயல்பட்டு, மதிசந்தை இணையதளத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மகளிர் சுய உதவிக்குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

முந்தைய செய்தி
போனால் போகட்டும் போடா... தவெக தலைமை மீது நாஞ்சில் சம்பத் அதிருப்தி? காரணம் இதுவா?
அடுத்த செய்தி
Apple removes Bitchat from app store in India

தொடர்புடைய செய்திகள்