Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அக்.27-ம் தேதி உண்ணாவிரத போராட்டம்: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

அக்.27-ம் தேதி உண்ணாவிரத போராட்டம்: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட கட்டுமானத் தொழிலைச் சார்ந்த பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலை குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் மணல் குவாரிகள் திறக்க வலியுறுத்தி, திருச்சியில் வரும் 27ஆம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்ள லாரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

திருச்சியில் தமிழ்நாடு கனிமவள லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கைலாசம் தலைமையில் நடந்தது. மாநிலச் செயலாளர் லோகநாதன், மாநில பொருளாளர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட கட்டுமானத் தொழிலைச் சார்ந்த பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலை குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளதால், மணல் லாரி உரிமையாளர்கள், லாரி ஓட்டுநர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே, ஏழை, எளிய மக்களின் சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்கவும், கட்டுமானத் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், தமிழக அரசு மணல் குவாரிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27-ம் தேதி திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

முந்தைய செய்தி
Philip Morris offers less harmful alternatives for smokers
அடுத்த செய்தி
சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கமான மடீட்சியா தொழில்முனைவோர் மாநாடு

தொடர்புடைய செய்திகள்