Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஒரே காரில் சென்று முதல்வர் விஜயுடன் கஃபேவில் காபி அருந்திய ராகுல்காந்தி

ஒரே காரில் சென்று முதல்வர் விஜயுடன் கஃபேவில் காபி அருந்திய ராகுல்காந்தி

இந்தியாவில் நீட் தேர்வு, கல்விக் கட்டண உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களை திரட்டி, மாணவர்களின் குரல் என்ற நிகழ்ச்சியை ராகுல் நடத்தி வருகிறார்.

பகிரவும் WhatsApp Facebook

தமிழக முதல்வர் விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்து, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து நீலாங்கரையில் உள்ள முதல்வர் விஜய் வீட்டுக்கு ராகுல் காந்தி சென்றார். அங்கு ராகுல் காந்திக்கு விஜய் விருந்து அளித்தார். பின்னர் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். அப்போது, தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகளின்றி தனியாக ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, முதல்வர் விஜய்யும், ராகுலும் ஒரே காரில் பாலவாக்கத்தில் உள்ள கபேவுக்குச் சென்று, காபி அருந்தினர்.
பின்னர் சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்றார்.

இந்தியாவில் நீட் தேர்வு, கல்விக் கட்டண உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களை திரட்டி, மாணவர்களின் குரல் என்ற நிகழ்ச்சியை ராகுல் நடத்தி வருகிறார். ராஜஸ்தானின் கோட்டா, மஹாராஷ்டிராவின் புனே, நாசிக், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரங்களைத் தொடர்ந்து சென்னை தீவுத்திடலில் நேற்று மாணவர்களின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் சகோதரர் மணிரத்னம் கொண்டு வந்த நீட் தேர்வுக்கு எதிரான பதாகையில் ராகுல் கையெழுத்திட்டார்.

நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது: தமிழகத்தின் இரண்டு ஆளுமைகள் திருவள்ளுவர், பெரியார். உங்கள் கலை, வரலாறு, மண், பாரம்பரியம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளுங்கள். மாணவர்கள் பகுத்தறிந்து தாங்கள் விரும்புவதை மனதாரச் செய்யுங்கள். தமிழகத்துக்கு ஒவ்வொரு முறை வரும்போதும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்கிறேன். ஒருவர் சொல்கிறார் என்பதற்காக எதையும் அப்படியே பின்பற்றாதீர்கள். தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுகிறது. நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு சிதைகிறது. தொகுதி மறுவரையறையால் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் குரல் ஒடுக்கப்படுகிறது. தமிழ் கலாச்சாரம் மீதான தாக்குதலை அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு ராகுல் பேசினார்.

முந்தைய செய்தி
அதானி கிரீன் மின் உற்பத்தித் திறன் 24% உயர்வு
அடுத்த செய்தி
நாட் ஹேபிட் விரிவாக்கத்துக்கு ரூ.142 கோடி முதலீடு

தொடர்புடைய செய்திகள்