Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

‘ஜனநாயக ரீதியாக தேர்தல் நடைபெறவில்லை’

‘ஜனநாயக ரீதியாக தேர்தல் நடைபெறவில்லை’

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை.

பகிரவும் WhatsApp Facebook

கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை ஆலோசனை கூட்டம் அதன் மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி, அவைத் தலைவர் திருவிக. எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சிவசாமி, மல்லிகா சுப்பராயன் ஆகியோர் பேசினர்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை. முறையாக நடந்திருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும். 50,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயிப்போம் என்றார்கள். ஆனால் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஓட்டுகள் தவெக. அரசுக்கு எதிராக விழுந்துள்ளது.

 
இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. மேலும் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மின்தடை, போதைப்பொருள் புழக்கம், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகரித்து விட்டது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி தாய்மாமன் திட்டம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம் போன்ற திட்டங்களை தொடங்கினார்கள். 

மேலும் கூட்டணி கட்சிகள் இருந்தும் 37 சதவீதம் ஓட்டுகளை மட்டுமே அவர்களால் பெற முடிந்தது. தவெகவில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் கூறினார்.


முந்தைய செய்தி
எஸ்பிஐ மூலம் பணியாளர்களுக்கு சம்பளம்; ரூ. 50 லட்சம் வரை விபத்து காப்பீடு - டாஸ்மாக் முடிவு
அடுத்த செய்தி
French student protests: comparisons with 1968 will only serve political extremes

தொடர்புடைய செய்திகள்