தமிழகத்தில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அரிசி, சர்க்கரை, புளி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விலைவாசி உயர்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடமும் உரிய பதில் இல்லை.
மேட்டூர் அணையில் இருந்து திட்டமிடாமல் தண்ணீர் திறந்துவிட்டதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடியை முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 58 அடியாக மட்டுமே உள்ளது. இந்த நீர் இருப்பு குடிநீர்த் தேவைக்கே போதுமானதாக இருக்காது. தமிழகத்தில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் குடிநீருக்காகக் காவிரி ஆற்றை நம்பியுள்ளனர்.மேலும், அடுத்த ஆண்டு மே, ஜூன் மாதங்கள் வரையிலான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு அணையில் தண்ணீர் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரைப் பெறுவதற்கு, கர்நாடக அரசை முதல்வர் விஜய் அணுகியிருக்க வேண்டும். ஆனால், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் குடிநீர்ப் பிரச்சினையும் ஏற்படும் அபாயம் உள்ளது.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் விரைவில் கூட்டப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.