Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

முஸ்லீமாக மாறியவர்கள் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை பெற முடியாது

முஸ்லீமாக மாறியவர்கள் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை பெற முடியாது

இஸ்லாத்துக்கு மதம் மாறிய 7 முஸ்லிம் பிரிவினரை Backward Class Muslims என அங்கீகரித்து, அவர்களுக்கு தமிழக அரசு இட ஒதுக்கீடு வழங்கியது.

பகிரவும் WhatsApp Facebook

இஸ்லாமியராக மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் கொள்கையை உறுதி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாத்துக்கு மதம் மாறிய 7 முஸ்லிம் பிரிவினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - முஸ்லிம்கள் (Backward Class Muslims) என அங்கீகரித்து, அவர்களுக்கு தமிழக அரசு இட ஒதுக்கீடு வழங்கியது. தமிழக அரசின் இந்த முடிவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. 

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று தீர்ப்பு வழங்கியது.

அதில், “இந்து சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாத்துக்கு மதம் மாறுவதால் அவர் தானாகவே இஸ்லாமிய சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம்பெற முடியாது. 

தமிழக அரசு பிறப்பித்த இந்த உத்தரவு, இட ஒதுக்கீட்டுச் சலுகைகளைப் பெறுவதற்காக ஒரு செயற்கையான பிரிவினரை உருவாக்குவதாக உள்ளது. ஒரு சமூகத்தைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவித்து, அவர்களுக்குச் சலுகைகள் வழங்குவதற்கு முன்பாக சட்டப்பூர்வமான சமூக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

இந்து சமூக அமைப்பில் இருந்து இந்து அல்லாத சமூக அமைப்புக்கு மதம் மாறிய ஒருவர், இத்தகைய இடஒதுக்கீட்டுச் சலுகையைக் கோர முடியாது” என தீர்ப்பளித்தனர்.

முந்தைய செய்தி
மாமன்றக் கூட்டங்கள்: புதிய நெறிமுறை வெளியீடு
அடுத்த செய்தி
உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் பதவியேற்பு

தொடர்புடைய செய்திகள்