கடந்த ஆட்சியில் நெசவாளர்களுக்கு நிலுவையில் இருந்த ரூ.13 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜய்பாலாஜி தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கர்ப்பிணிகள் 100 பேருக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கைத்தறி, துணி நூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தரமான இலவச வேட்டி சேலைகள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாட விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு அறிவித்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் நிலுவைத் தொகையாக இருந்த ரூ.13 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது" என்றார்.நெசவாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்: நிலுவைத் தொகை ரூ.13 கோடியை விடுவித்த தமிழக அரசு
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கர்ப்பிணிகள் 100 பேருக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.