Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.5,000 கோடிக்கும் அதிகமான சைபர் மோசடியைத் தடுத்த ‘சஞ்சார் சாதி’ இணையதளம்!

ரூ.5,000 கோடிக்கும் அதிகமான சைபர் மோசடியைத் தடுத்த ‘சஞ்சார் சாதி’ இணையதளம்!

மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை சார்பில், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, கடந்த மே 2023ல் சஞ்சார் சாதி இணையதளம் தொடங்கப்பட்டது.

பகிரவும் WhatsApp Facebook

சஞ்சார் சாதி இணையதளம் மூலம் பெறப்பட்ட மோசடி புகார்களின் அடிப்படையில், ரூ.5,000 கோடிக்கும் அதிகமான சைபர் மோசடி இழப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது.


மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை சார்பில், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, கடந்த மே 2023ல் சஞ்சார் சாதி இணையதளம் தொடங்கப்பட்டது. இந்த தளத்தை பொதுமக்கள் தங்கள் பெயரில் வழங்கப்பட்டுள்ள செல்போன் இணைப்புகளை சரிப்பார்ப்பதுடன், திருடப்பட்ட போன்களை முடக்கவும், ஐஎம்இஐ எண்ணை சரிப்பார்க்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் தெரிவித்துள்ளதாவது: சந்தேகத்துக்குரிய மோசடி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் தகவல்கள் தொடர்பாக ‘சஞ்சார் சாதி’ தளத்தில் இதுவரை 12.80 லட்சம் புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் 59.82 லட்சம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மொபைல் இணைப்புகள் துண்டிப்பு அடங்கும்.

பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் நிதி மோசடி அபாயக்குறியீடு உருவாக்க முக்கிய தகவல்களாக பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், நிதி மோசடி தொடர்பான செல்போன் எண்கள் அடையாளம் காண இந்த அமைப்பு உதவுகிறது. இவையனைத்தும், வங்கிகள், பணபரிவர்த்தனை சேவை நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பகிரப்படுகின்றன. இதன் மூலம், ரூ.5,000 கோடிக்கும் அதிகமான சைபர் மோசடி இழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.

மேலும், தொலைந்த மற்றும் திருடப்பட்ட செல்போன்களைத் தடுப்பதிலும் சஞ்சார் சாதி முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதுவரை 60.96 லட்சம் செல்போன்கள் முடக்கப்பட்டுள்ளன. அவற்றில் 37.85 லட்சம் செல்போன்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் 14 லட்சத்துக்கும் அதிகமான செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. தங்கள் பெயரில் வழங்கப்பட்டுள்ள செல்போன் இணைப்புகள் குறித்த தகவல்களைப் பெறுவதற்காக சஞ்சார் சாதி தளத்தில் 4 கோடிக்கும் மேற்பட்ட கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. மேலும், சஞ்சார் சாதி செயலியை இதுவரை 2.8 கோடிக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
பருவநிலை மாற்றத்தால் மறையும் நிலையில் ஸ்லோவேனிய பனிப்பாறை
அடுத்த செய்தி
அணை திறந்து ஒரு மாதம் ஆச்சு! இன்னும் தண்ணீர் வரல! - கொதித்தெழுந்த விவசாயிகள்

தொடர்புடைய செய்திகள்