சரக்குகளை கையாண்டதினால், கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.263.78 கோடியாக இருந்த வருவாய் நடப்பாண்டு செப்டம்பரில் ரூ.288.34 கோடியாக உயர்ந்துள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் பயணிகள் போக்குவரத்தை காட்டிலும், சரக்கு போக்குவரத்தை கையாளுவதால், தான் ரயில்வேக்கு வருவாய் அதிகம். தெற்கு ரயில்வேயில், தினமும், நிலக்கரி, தானியங்கள், பெட்ரோலிய பொருட்கள் சரக்கு ரயில்களில் அனுப்படுகிறது. பார்சல்கள் பயணிகளில் ரயில்களில் அனுப்படுகிறது. இதனால் ரயில்வேயிக்கு அதிகளவில் வருவாய் கிடைக்கிறது.
இதில் மற்ற சரக்குகளை விட துறைமுகங்களில் இருந்து அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்லப்படுவது தான் அதிகம். இப்படி கையாளும் சரக்குகள், வருவாய் ஆகியவை மாதம் தோறும் அதிகரித்து வருகிறது.
நடப்பு நிதியாண்டில், செப்டம்பர் மாதம் மட்டும் 31.42 லட்சம் டன் சரக்குகளை தெற்கு ரயில்வே கையாண்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் 30.54 லட்சம் டன் சரக்குகளை தான் கையாண்டு இருக்கிறது.
கடந்தாண்டு செப்டம்பர் காட்டிலும், இந்தாண்டு (2026) செப்டம்பரில் 2.9 சதவீதம் கூடுதலாக சரக்குகளை, ரயில்கள் வழியாகவே அனுப்பட்டுள்ளது. இதனால் வருவாயும் கடந்த ஆண்டை காட்டிலும், இந்தாண்டு செப்டம்பரில் 9.3 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளது.
அதாவது கடந்த 2025 செப்டம்பரில் ரூ.263.78 கோடியாக இருந்த வருவாய் 2026 செப்டம்பரில் ரூ.288.34 கோடியாக உயர்ந்துள்ளது. இது இந்த அக்டோபரில் மேலும் அதிகரிக்கும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.