Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.1 லட்சம் மானியம் - சூரிய மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவதில் ஆர்வம் காட்டும் மக்கள்

ரூ.1 லட்சம் மானியம் - சூரிய மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவதில் ஆர்வம் காட்டும் மக்கள்

மத்திய அரசின் திட்டத்தின்கீழ், குடியிருப்பு நுகர்வோருக்கு 1 கிலோவாட் அமைப்பதற்கு ரூ.30,000, இரண்டு கிலோ வாட்டிற்கு ரூ.60,000 மற்றும் 3 கிலோவாட் அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்புகளுக்கு ரூ.78,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

மத்திய அரசின் ‘பிரதமரின் சூர்ய கர்’ (PM Surya Ghar) திட்டத்துடன், தமிழக அரசின் கூடுதல் மானியமும் இணைந்து வழங்கப்படுவதால், வீடுகளில் கூரை அமைப்பிலான சூரிய மின் உற்பத்தி அமைப்புகளை (Rooftop Solar) நிறுவுவதில் பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.


மத்திய அரசின் திட்டத்தின்கீழ், குடியிருப்பு நுகர்வோருக்கு 1 கிலோவாட் அமைப்பதற்கு ரூ.30,000, இரண்டு கிலோ வாட்டிற்கு ரூ.60,000 மற்றும் 3 கிலோவாட் அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்புகளுக்கு ரூ.78,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.

இதனுடன், தமிழக அரசு சார்பில் 1 கிலோவாட்டிற்கு ரூ.5,000, இரண்டு கிலோவாட்டிற்கு ரூ.10,000 மற்றும் 3 கிலோவாட் அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்புகளுக்கு ரூ.22,000 கூடுதல் மானியமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் 3 கிலோவாட் கூரை அமைப்பை நிறுவும் ஒரு குடும்பம் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து கூட்டு மானியமாக ரூ.1 லட்சம் வரை பெற முடியும். இந்த மானியத்தொகை, ஆய்வு செய்யப்பட்டு இணைப்பு வழங்கப்பட்ட பிறகு பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

ஈரோட்டில் சோலார் பேனல் அமைக்கும் நிறுவனம் நடத்தி வரும் அன்னபூரணி கூறியதாவது:
‘தமிழ்நாடு சோலார் ஹோம்ஸ்’ இணையதளத்தின்படி, 1 கிலோவாட் அமைப்பிற்கான உத்தேச செலவு ரூ.77,500 ஆகும். இதில் கூட்டு மானியம் ரூ.35,000 கழிந்தது போக நுகர்வோரின் பங்களிப்பு ரூ.42,500-ஆக இருக்கும். 2 கிலோவாட் அமைப்பிற்கு உத்தேச செலவு ரூ.1.42 லட்சம், மானியம் ரூ.70,000, நுகர்வோர் பங்களிப்பு ரூ.72,500 ஆகும். 3 கிலோவாட் அமைப்பிற்கு உத்தேச செலவு ரூ.2 லட்சம், மானியம் ரூ.1 லட்சம் மற்றும் நுகர்வோர் பங்களிப்பு ரூ.1 லட்சமாக இருக்கும்.

சூரிய மின் உற்பத்தியைப் பதிவுசெய்ய மின்வாரியம் சார்பில் இருவழி மீட்டர் (Bi-directional/Net Meter) பொருத்தப்படுகிறது. இதற்காக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளின்படி, ஒற்றை முனை (Single Phase) இணைப்புகளுக்குக் கட்டணமாக ரூ.2,610 மற்றும் மூன்று முனை (Three Phase) இணைப்புகளுக்கு ரூ.5,011 கட்டணமாக நுகர்வோரால் செலுத்தப்பட வேண்டும்.

இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் ‘பிஎம் சூர்ய கர்’ இணையதளத்தின் மூலம் பதிவு செய்து, அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரைத் தேர்வு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து மின் பகிர்மானக் கழகத்தின் ஆய்வுக்குப் பிறகு நெட்-மீட்டர் பொருத்தப்பட்டு மின் இணைப்பு வழங்கப்படும். கூரை அமைப்பிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் முதலில் வீட்டுப் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, உபரி மின்சாரம் மின்சார விநியோகக் கட்டமைப்பிற்கு (Grid) அனுப்பப்படும்.

தற்போதைய நடைமுறைப்படி, இந்த உபரி மின்சாரத்தின் கணக்கீட்டுக் காலம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இருப்பினும், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கோடை காலத்தில் மின்தேவை அதிகரிப்பதால், திரட்டப்பட்ட உபரி மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என நுகர்வோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை: எங்கெல்லாம்?
அடுத்த செய்தி
அரசு எங்களை ஏமாற்றினால்...? - செவிலியர்கள் சொன்ன தகவல்

தொடர்புடைய செய்திகள்