Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.13,000 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி - லிஸ்ட் இதோ!

ரூ.13,000 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி - லிஸ்ட் இதோ!

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) நிறுவனத்தின் மணலி சுத்திகரிப்பு நிலையத்தில் 2, 3-வது பிரிவு ‘மசகு எண்ணெய் அடிப்படை இருப்பு’ திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பகிரவும் WhatsApp Facebook

ஐஐடியில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், தமிழகத்துக்கான ரூ.13,000 கோடி வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவுக்குப் பிறகு பிரதமர் மோடி சென்னை ஐஐடி செல்கிறார். அங்கு நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் பங்கேற்கும் அவர், மொத்தம் ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிந்த திட்டங்களை தொடங்கிவைக்கிறார். அமிரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.72 கோடியில் நவீன முறையில் மேம்படுத்தப்பட்ட பழனி, வேலூர் கன்டோன்மென்ட், அம்பாசமுத்திரம், பரமக்குடி, நாமக்கல் ரயில் நிலையங்களை திறந்துவைக்கிறார். சுமார் ரூ.550 கோடி செலவில் அமைக்கப்பட்ட காரைக்கால்-பேரளம் இடையிலான புதிய ரயில் பாதையை நாட்டுக்கு அர்பணிக்கிறார்.

கோவை பகுதியில் கட்டப்பட்டுள்ள 3 ரயில்வே மேம்பாலங்களையும் பிரதமர் திறந்து வைக்கிறார். மேலும், தேசிய நெடுஞ்சாலை எண்-744-ல் வடுகப்பட்டி-தெற்கு வெங்காநல்லூர் இடையே 36 கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள 4 வழிச்சாலையையும், தேசிய நெடுஞ்சாலை எண்-744ஏ-ல் 30கி.மீ. நீளத்துக்கு உருவாக்கப்பட்டுள்ள மதுரை நான்கு வழி சுற்றுச் சாலையையும் நாட்டுக்கு அர்பணிக்கிறார்.

தேசிய நெடுஞ்சாலை எண்-83-ல் நாகை-தஞ்சாவூர் இடையே நான்குவழிச் சாலையில் திருவாரூர் புறவழிச்சாலை அமைக்க பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். தமிழகத்தில் கடல்சார் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், சரக்கு கையாளும் திறனை மேம்படுத்தும் திட்டங்களை தொடங்கியும், அடிக்கல்நாட்டவும் உள்ளார். அதன்படி, சென்னை துறைமுகத்தில் 4, தூத்துக்குடி துறைமுகத்தில் 8, எண்ணூர் துறைமுகத்தில் 1 என மொத்தம் 13 திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகின்றன. மேலும், பல்வேறு கட்டுமானப் பணிகளையும் பிரதமர் தொடங்கிவைக்கிறார்.

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) நிறுவனத்தின் மணலி சுத்திகரிப்பு நிலையத்தில் 2, 3-வது பிரிவு ‘மசகு எண்ணெய் அடிப்படை இருப்பு’ திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். சென்னை ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள இளையராஜா இசை ஆராய்ச்சி மையம், சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையம் ஆகியவற்றையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 

முன்னதாக, போரூரில் உள்ள ஆதி குபேர ஜலகண்டேஸ்வரர் கோயில் பிரதமர் வழிபாடு நடத்துகிறார். மாலையில் தனியார் பள்ளி பொன் விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர், அங்கிருந்து காரில் விமான நிலையம் சென்று, தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

மெட்ரோ ரயில் சேவை

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீ. நீளத்துக்கு 3-வது வழித்தடப் பணிகளும் அடங்கும். அதில் வடபழனி-பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 14.64 கி.மீ. தொலைவுக்கு பணிகள் முடிந்துள்ளன. இப்பாதையில் ரயில்கள் இயக்க தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி அளித்துள்ளார். ரயில் பயணத்தை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார். விஜய் முதல்வரான பிறகு பிரதமர் மோடியுடன் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும்.

பூந்தமல்லியில் நடைபெறும் தொடக்கபப் விழாவுக்கு பிறகு, அங்கிருந்து போரூர் வரை பிரதமர் மோடி, முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்கின்றனர். பின்னர், போரூரில் இருந்து புறப்பட்டுச் சென்று ஐஐடி-ல் நடைபெறும் விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்.

முந்தைய செய்தி
இவெகோவை வாங்க கூடுதல் விலை வழங்கும் டாடா மோட்டார்ஸ்
அடுத்த செய்தி
36 லட்சம் டன் எம்-சாண்ட் உற்பத்தி செய்ய என்எல்சிக்கு அனுமதி

தொடர்புடைய செய்திகள்