Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கோயில் பணியிடங்களை மகளிர் உதவி குழுவினரால் நிரப்ப உத்தரவு

கோயில் பணியிடங்களை மகளிர் உதவி  குழுவினரால் நிரப்ப உத்தரவு

எழுத்தர், தட்டச்சர், கணினி தட்டச்சர், துப்புரவாளர், ஓட்டுநர், பாதுகாவலர், மின் பணியாளர், பிளம்பர், விற்பனையாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட சி மற்றும் டி பிரிவு வெளித்துறை பணியிடங்களை தினக்கூலி அடிப்படையில் நிரப்பக் கூடாது.

பகிரவும் WhatsApp Facebook

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டு கோயில்களில், சி, டி பிரிவு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்ப பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்படும் வரை மகளிர் சுய உதவி மற்றும் வெளிமுகமையால் நிரப்ப வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையர் டிஜி வினய் உத்தரவிட்டுள்ளார்.


சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி, கோயில் பணியாளர்களைத் தேர்வு செய்ய தனியாக திருக்கோயில் பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்பட உள்ளது. அந்த வாரியம் முறையாக செயல்பாட்டுக்கு வரும் வரை, கோயில்களில் பணியாளர்களை நியமிக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில், எழுத்தர், தட்டச்சர், கணினி தட்டச்சர், துப்புரவாளர், ஓட்டுநர், பாதுகாவலர், மின் பணியாளர், பிளம்பர், விற்பனையாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட சி மற்றும் டி பிரிவு வெளித்துறை பணியிடங்களை தினக்கூலி அடிப்படையில் நிரப்பக் கூடாது. உரிய அனுமதி பெற்று வெளிமுகமை அல்லது மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பில் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இந்த நியமனங்கள் அனைத்தும் திருக்கோயில் சம்பளச் செலவின விதிகளுக்கு உட்பட்டு செய்ய வேண்டும்.

அதேவேளையில், கோயில்களின் உள்துறைப் பணிகளில் அத்தியாவசிய தேவையுள்ள பணியிடங்களை மட்டும் தினக்கூலி, தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேவையையும் அவசியத்தையும் விளக்கும் விரிவான அறிக்கையை சமர்ப்பித்து முன் அனுமதி பெற வேண்டும்.

ஏற்கெனவே தினக்கூலி, தொகுப்பூதியம், நிரந்தரப் பணியிடங்கள் தொடர்பாக அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள், முன்மொழிவுகள் ஆகியவற்றையும் புதிய சுற்றறிக்கையின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்து பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு மண்டல இணை ஆணையர்கள், துணை, உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள், அறங்காவலர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முந்தைய செய்தி
ஆயுத பூஜை, தீபாவளிக்கு 30,622 சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் விஜய் பார்த்தின் தமிழன்
அடுத்த செய்தி
UPI கட்டண நடைமுறை ஒத்திவைப்பு

தொடர்புடைய செய்திகள்