Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் வெளி மாநிலத்தவர் பயன்பெற முடியாது: சுகாதாரத்துறை

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் வெளி மாநிலத்தவர் பயன்பெற முடியாது: சுகாதாரத்துறை

தமிழக அரசு மருத்துவமனைகளில், பிறக்கும் குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிர திட்டத்தில், தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கடந்த ஜூன் 28-ல் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

பகிரவும் WhatsApp Facebook

‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் பிற மாநிலத்தவர்கள் பயன்பெற முடியாது என்று பொது சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

தமிழக அரசு மருத்துவமனைகளில், பிறக்கும் குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிர திட்டத்தில், தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கடந்த ஜூன் 28-ல் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இருந்தாலும், கடந்த ஜூன் 22-ல் முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அதற்கான டோக்கன்கள் விநியோகிகப்படுகின்றன. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனையில், பிரசவித்த உமா மகேஸ்வரி என்ற பெண்ணின் குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்க டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அவரது கணினிப் பதிவின் போது, கணவரின் முகவரி கர்நாடக மாநிலம் மைசூராக இருந்ததால், மென்பொருளில் தரவுகளைப் பதிவு செய்ய இயலாத நிலை ஏற்பட்டது.

இத்தகைய சிக்கல்களைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை இந்த திட்டம் தொடர்பான தகுதி விதிகளில் புதிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த திட்டத்தில் இலவச தங்க மோதிரம் பெற வேண்டுமானால், சம்பந்தப்பட்ட தாய் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசின் மகப்பேறு நிதியுதவி, கண்காணிப்புக்கான ‘பிக்மி’ எண் பதிவை முறையாக வைத்திருக்க வேண்டும் என்பதும் விதியாக்கப்பட்டுள்ளது. வெளிமாநில முகவரியைக் கொண்ட பெண்கள், மருத்துவ அவசரத்துகும் அல்லது தற்காலிகமாகவும் தமிழக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுப் பிரசவித்தாலும், அவர்கள் இந்த திட்டத்தில் பலன் பெற தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தெளிவுரை சென்னை உள்ளிட்ட நகரங்களில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்கள், எல்லையோர மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முந்தைய செய்தி
அணை திறந்து ஒரு மாதம் ஆச்சு! இன்னும் தண்ணீர் வரல! - கொதித்தெழுந்த விவசாயிகள்
அடுத்த செய்தி
கை கொடுத்த சரக்குகள்: ரூ.288.34 கோடியாக வருவாய் உயர்வு: சாதிக்கும் தெற்கு ரயில்வே

தொடர்புடைய செய்திகள்