Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

36 லட்சம் டன் எம்-சாண்ட் உற்பத்தி செய்ய என்எல்சிக்கு அனுமதி

36 லட்சம் டன் எம்-சாண்ட் உற்பத்தி செய்ய என்எல்சிக்கு அனுமதி

முதல்கட்டமாக சுரங்கம்-1 மற்றும் சுரங்கம்1-ஏ பகுதிகளில் மலைபோல குவித்து வைக்கப்பட்டுள்ள மண்ணை சுத்திகரிப்பு செய்து, அதை எம்.சாண்டாக மாற்றும் பணி தொடங்கியது.

பகிரவும் WhatsApp Facebook

என்எல்சி நிர்வாகம் தனது சுரங்கத்திலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட மணலை சுத்திகரித்து, 36 லட்சம் டன் எம்-சாண்ட் விற்பனை செய்ய தமிழக பொதுப்பணித் துறை அனுமதி வழங்கி உள்ளது.

நவரத்னா அந்தஸ்து பெற்ற மத்திய பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம், கடலூர் மாவட்டம் நெய்வேலியில் சுரங்கம் அமைத்து நிலக்கரி வெட்டி எடுத்து வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட மேலடுக்கு மண்ணை சுத்திகரித்து, அதிலிருந்து எம்-சாண்ட் உற்பத்தி செய்ய திட்டமிட்டது. தொடர்ந்து, சென்னை ஐஐடி மூலமாக ஆய்வு மேற்கொண்டு, மேல்மண்ணை சுத்திகரிப்பு செய்தது. சுத்திகரிப்பிற்கு பிறகான நிலையில் அந்த மணல் கட்டுமானத்துக்குத் தேவையான தரத்துடன் இருப்பதாக சான்றதழ் அளிக்கப்பட்டது. பின்னர், தமிழக அரசின் பொதுப்பணி மூலமாக அனுமதி பெறப்பட்டது.

முதல்கட்டமாக சுரங்கம்-1 மற்றும் சுரங்கம்1-ஏ பகுதிகளில் மலைபோல குவித்து வைக்கப்பட்டுள்ள மண்ணை சுத்திகரிப்பு செய்து, அதை எம்.சாண்டாக மாற்றும் பணி தொடங்கியது. அந்த எம்-சாண்ட் விற்பனையை, என்எல்சி இயக்குநர் (மனிதவளம்) சமீர் ஸ்வரூப் தொடங்கிவைத்தார். இந்த முயற்சியானது வளப் பயன்பாடு, சுழற்சிப் பொருளாதாரம் மற்றும் நீடித்த நிலையான சுரங்கத் தொழில் ஆகியவற்றை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பாகத் திகழ்வதாக அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், சுரங்கம்-1 அலகுத் தலைவர் என். குமார், சந்தைப்படுத்தல் மற்றும் நிலையான வளர்ச்சிப் பிரிவு பொது மேலாளர் என்.அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து சுரங்கத் துறை செயல் இயக்குநர் ஐ.எஸ்.ஜாஸ்பர் ரோஸ் கூறுகையில், "ஆண்டுக்கு 36 லட்சம் டன் எம்-சாண்ட் உற்பத்தி செய்வதற்காக தமிழக அரசின் பொதுப்பணித் துறையிடம் அனுமதி பெற்றுள்ளோம். தொடர்ந்து 10 ஆண்டுகள் எம்-சாண்ட் உற்பத்தி செய்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. தற்போது, வெளிச்சந்தையில் ஒரு யூனிட் எம்.சாண்ட் ரூ.5,500 முதல் ரூ.7,000 வரையில் விற்பனையாகும் நிலையில், அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கு ரூ.1,127-க்கு வழங்கி வருகிறோம். இந்த எம்-சாண்ட் மூலமாக கட்டடம் கட்டலாம் என சென்னை ஐஐடி மற்றும் பொதுப்பணித்துறை சான்றழித்துள்ளது.

தரக் கட்டுப்பாட்டு அங்கீகாரம்

பிஐஎஸ் (BIS) சான்றிதழ் பெற்ற என்எல்சி நிறுவனத்தின் இந்த மணல், தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்புதலையும் பெற்றுள்ளதன் மூலம், நிர்ணயிக்கப்பட்ட தரக் கட்டுப்பாடுகளுக்கு முழுமையாக இணங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எம்-சாண்ட் விற்பனைத் தொடக்கமானது 'கழிவிலிருந்து செல்வம்' என்ற என்எல்சி நிறுவனத்தின் இலக்கு நோக்கிய பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைவதுடன், மேலடுக்கு மண்ணை மதிப்பு கூட்டப்பட்ட கட்டுமானப் பொருளாக மாற்றுவதன் மூலம் நிலையான வளப் பயன்பாட்டின் மீதான நிறுவனத்தின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது" என்றார்.

முந்தைய செய்தி
ரூ.13,000 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி - லிஸ்ட் இதோ!
அடுத்த செய்தி
ரூ.25,000 கோடிக்கு அரசு பத்திரங்களை விற்க ஆர்பிஐ திட்டம்

தொடர்புடைய செய்திகள்