Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மருந்து தெளிக்கும் ட்ரோன் உற்பத்தி செய்ய கோத்தாரி நிறுவனத்துக்கு அனுமதி

மருந்து தெளிக்கும் ட்ரோன் உற்பத்தி செய்ய கோத்தாரி நிறுவனத்துக்கு அனுமதி

இதற்கு கடந்த 9-ம் தேதி விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் சான்றிதழ் பெற்றுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவில் வணிகரீதியாக மருந்து தெளிப்பு ட்ரோனை உற்பத்தி செய்து, விற்பனை செய்ய கோத்தாரி இண்டஸ்ட்ரியல் நிறுவனத்துக்கு, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அனுமதி வழங்கியுள்ளது.


சென்னையை தலைமையிடமாக கொண்ட டி.சி. கோத்தாரி குழுமம், உரங்கள், ரசாயனங்கள், தொழிற்சாலை மூலப்பொருட்கள், உணவு, மருந்து, காலணி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இக்குழுமத்தின் முதன்மை நிறுவனமான கோத்தாரி இண்டஸ்ட்ரியல் "KOAIR -10L" என்ற பெயரில் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட வேளாண் ட்ரோனை உருவாக்கியுள்ளது.

இதற்கு கடந்த 9-ம் தேதி விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் சான்றிதழ் பெற்றுள்ளது. இதன் மூலம், ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு, இந்த ட்ரோனை இந்தியாவில் வணிக ரீதியாக உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கும், பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கும் அனுமதி கிடைத்துள்ளது.

புதிய KOAIR-10 L ட்ரோன் 6 இறக்கைகள் கொண்ட நடுத்தர வகை ட்ரோன் ஆகும். இதில் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட தெளிப்புத் தொட்டியும், சீரான தெளிப்பை உறுதிசெய்ய 4 தெளிப்பு முனைகளும் இடம்பெற்றுள்ளன. பூச்சிக்கொல்லிகள், உரங்கள் மற்றும் தாவர ஊட்டச்சத்துகளைத் தெளிப்பதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை 30 கிலோவாகும்.

மேலும், துல்லியமான வழித்தடத்தில் பறப்பதற்கான செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பு, புறப்பட்ட இடத்துக்குத் தானாகத் திரும்பும் வசதி, நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் இயங்குவதற்கான புவி வேலியமைப்பு, தடைகளைக் கண்டறிந்து தவிர்க்கும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் இதில் உள்ளன.

இது குறித்து கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் வெளியிட்ட அறிக்கை: பூச்சிக்கொல்லிகள் போன்ற வேளாண் ரசாயனங்களுடன் மனிதர்கள் நேரடியாக தொடர்புகொள்வதைக் குறைப்பதுடன், குறைந்த நேரத்தில் வயல்களில் தெளிப்புப் பணிகளை முடிக்கவும் இந்த தொழில்நுட்பம் உதவும்.

இதுகுறித்து கோத்தாரி இண்டஸ்ட்ரியல் நிறுவனத்தின் செயல் தலைவர் ஜின்னா ரஃபிக் அகமது கூறுகையில், “விவசாயத்தைப் பாதுகாப்பானதாகவும், செலவு குறைந்ததாகவும் மாற்றி, விவசாயிகளின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் வேளாண் ட்ரோன் தொழில்நுட்பத்தில் நாங்கள் நுழைந்துள்ளோம்” என்றார்.
முந்தைய செய்தி
US keeps China in Tier 3 over forced labour
அடுத்த செய்தி
'AI tools like ChatGPT opening new opportunities for businesses'

தொடர்புடைய செய்திகள்