Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

எகிறும் தங்கவிலை.. இமிடேஷன் நகைகள் பக்கம் திரும்பும் பெண்கள்!

எகிறும் தங்கவிலை.. இமிடேஷன் நகைகள் பக்கம் திரும்பும் பெண்கள்!

தரமான இமிடேஷன் நகைகளின் பளபளப்பு வழக்கமான பயன்பாட்டில் சுமார் 6 மாதம் வரை நீடிக்கும்.

பகிரவும் WhatsApp Facebook

பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தங்க நகைகளுக்குப் பதிலாக இமிடேஷன் நகைகளை பெண்கள் அதிகளவில் அணியத் தொடங்கியுள்ளதாக ஈரோடு நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.


தங்க நகைகளைப் போன்ற தோற்றத்தில் உள்ள சங்கிலி, காதணி, மூக்குத்தி, வளையல், பிரேஸ்லெட், தாலிச் சங்கிலிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான இமிடேஷன் (விலை மலிவான உலோகங்கள், செயற்கைப் பொருட்களால் செய்யப்படும்) நகைகள் கிடைக்கின்றன. நகை வியாபாரிகள் கவிதா, பூவிழி, சௌந்தர்யா ஆகியோர் கூறுகையில், "இந்த வகை நகைகள் விலை வடிவமைப்பு மற்றும் எடைக்கு ஏற்ப ரூ.200 முதல் ரூ.2,000 வரை உள்ளது.

தரமான இமிடேஷன் நகைகளின் பளபளப்பு வழக்கமான பயன்பாட்டில் சுமார் 6 மாதம் வரை நீடிக்கும். அவை தொலைந்தாலோ, திருடப்பட்டாலோ தங்க நகைகளைப் போல் அதிகளவில் பொருளாதார இழப்பு ஏற்படாது. இமிடேஷன் நகைகளுக்கு அடுத்ததாக சற்றுக் கூடுதல் விலையில் ஐம்பொன் நகைகளும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இவற்றை முறையாகப் பராமரித்துப் பயன்படுத்தினால் பல ஆண்டுகள் பளபளப்பு நீடிக்கும். தொடர்ந்து பயன்படுத்தும்போது நிறம் மங்கக்கூடும், என்பதால் திருமணம், திருவிழா மற்றும் குடும்ப நிகழ்ச்சிகள் போன்றவற்றில் அவ்வப்போது பயன்படுத்தினால் நீண்ட காலத்துக்கு அதன் தோற்றத்தைப் பராமரிக்கலாம்" என்றனர்.


ஈரோடு ஆர்.ஜே. பிரைடல் ஜூவல்லரி உரிமையாளர் ஜெயக்குமார் கூறியதாவது:

தங்க நகைகளைப் போன்ற தோற்றம் கொண்ட ஐம்பொன் நகைகளில் ஆரம், ஒட்டியாணம், வங்கி, சங்கிலி, நெற்றிச்சுட்டி, காதணிகள் உள்ளிட்ட பல்வேறு வகைகள் கிடைக்கின்றன. லட்சுமி, தாமரை உள்ளிட்ட வடிவங்களிலும், தங்க நகைகளைப் போன்ற உயர்தர வேலைப்பாடுகளிலும் இவை தயாரிக்கப்படுகின்றன.

வடிவமைப்புக்கு ஏற்ப இவற்றின் விலை ரூ.2,000 முதல் ரூ.4,000 வரை உள்ளது. பல அழகு நிலையங்கள் இத்தகைய நகைகளை வாங்கி மணப்பெண் அலங்காரத்தின்போது பயன்படுத்துகின்றன. மணப்பெண் அலங்காரத்துக்கான முழுமையான நகைத் தொகுப்புகளும் கிடைக்கின்றன. அழகு நிலையங்களில் மணப்பெண் அலங்காரத்துக்கு ரூ.15,000 முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இத்தகைய நகைத் தொகுப்புகளை வாங்குவது குறுகிய காலத்திலேயே முதலீட்டுத் தொகையை ஈட்ட உதவும் இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
முந்தைய செய்தி
கை கொடுத்த சரக்குகள்: ரூ.288.34 கோடியாக வருவாய் உயர்வு: சாதிக்கும் தெற்கு ரயில்வே
அடுத்த செய்தி
‘அண்ணன் சீர்’ திட்டத்துக்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு: வருமான வரம்பு நிர்ணயத்தால் ’தங்கைகள்’ ஏமாற்றம்

தொடர்புடைய செய்திகள்