Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வரும் 16-ம் தேதி சர்வதேச ஆட்டோமொபைல் விநியோக சங்கிலி மாநாடு

வரும் 16-ம் தேதி சர்வதேச ஆட்டோமொபைல் விநியோக சங்கிலி மாநாடு

நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 'ஆட்டோமேட்டிவ் சப்ளே செயின் சம்மிட் 2026' என்ற பெயரில் இந்த மாநாடு நடக்கிறது.

பகிரவும் WhatsApp Facebook

இந்திய வாகனத் துறையில் மின்சார வாகனங்களின் வளர்ச்சி, உதிரிபாகங்களின் உள்நாட்டு உற்பத்தி, உலகளாவிய விநியோக சங்கிலி மாற்றங்கள் குறித்த ஆட்டோமொபைல் விநியோகச் சங்கிலி மாநாடு வரும் 16-ம் தேதி சென்னையில் நடக்கிறது.


நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 'ஆட்டோமேட்டிவ் சப்ளே செயின் சம்மிட் 2026' என்ற பெயரில் இந்த மாநாடு நடக்கிறது. வாகன உதிரிபாகங்களைப் பெறுவது முதல் அவற்றை சேமித்து விநியோகிப்பது வரையிலான செயல்பாடுகளை மேம்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகிறது. இண்ட்ரோலாஜிஸ்டிக்ஸ் அண்டு வேர்ஹவுசிங் எக்ஸ்போ 2026' கண்காட்சின் முக்கியப் பகுதியாக இந்த மாநாடு நடக்கிறது.

இந்த மாநாட்டில் வாகன உதிரிபாகங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல், இரண்டாம், மூன்றாம் நிலை உதிரிபாக வழங்குநர்களின் கட்டமைப்பை வலுப்படுத்துதல், ஏற்றுமதிக்கான தயார்நிலையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளன.

மேலும், மின்சார வாகனங்களின் வேகமான வளர்ச்சியால் உதிரிபாகங்களின் வகைகள், அவற்றை சேமிக்க ஏற்படும் மாற்றங்கள், சேமிப்புக் கிடங்குகளில் தானியங்கி இயந்திரங்களைப் பயன்படுத்துதல், விநியோக சங்கிலியை நிகழ்நேரத்தில் கண்காணிப்பது போன்ற அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களும் இந்த மாநாட்டில் ஆராயப்பட உள்ளன.

இந்த முக்கிய மாநாட்டில் இசட்.எஃப். குழுமத்தின் இந்தியக் கொள்முதல் பிரிவுத் தலைவர் பவானந்த் தாக்குர், டி.ஒய். ஆட்டோ நிறுவன ஆலை இயக்குநர் நாராயண்ராவ் குல்கர்னி, ராப்டீ. எச்.வி. நிறுவன மின்னணு செயல்பாடுகள் மற்றும் விநியோகச் சங்கிலிப் பிரிவுத் தலைவர் தேவக் ஓமப்பிரகாசன், ஸ்டெல்லான்டிஸ் இந்தியா நிறுவன உலகளாவிய திட்ட கொள்முதல் மேலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்கின்றனர்.

ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவன தலைமை செயல்பாட்டு அதிகாரி எச். சண்முகவேல், விநியோகச் சங்கிலி மேலாண்மை, வணிக செயல்திறன் தொடர்பான தலைமைத்துவ உரையை நிகழ்த்த உள்ளார்.

வாகன உற்பத்தியாளர்கள், உதிரிபாக நிறுவனங்கள், தளவாடத் துறை நிறுவனங்களுக்கு இடையே தொழில்முறைத் தொடர்புகளை உருவாக்கவும், விநியோகச் செலவுகளைக் குறைப்பதற்கான நவீன தொழில்நுட்பத் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த மாநாடு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
முந்தைய செய்தி
பள்ளிகளில் விளையாட்டு அட்டவணையில் பிற பாடங்கள் நடத்தக்கூடாது - அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு
அடுத்த செய்தி
டிவிஎஸ் குடும்பத்தில் ரூ.1.80 லட்சம் கோடி சொத்து பங்கீட்டுச் சர்ச்சை

தொடர்புடைய செய்திகள்