Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இந்தியன் வங்கியின் நிகர லாபம் 15% உயர்வு

இந்தியன் வங்கியின் நிகர லாபம் 15% உயர்வு

வீட்டுக் கடன்கள் உள்ளிட்ட அடமானக் கடன்களும் 12.33 சதவீதம் அதிகரித்துள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், இந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 14.71 சதவீதம் உயர்ந்து, ரூ.3,462 கோடியாக அதிகரித்துள்ளது.


சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கிக்கு நாடு முழுவதும் 6,017 கிளைகளும், 5,678 ஏ.டி.எம். மையங்களும் உள்ளன. இந்நிலையில், வங்கியின் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு மற்றும் முதல் அரையாண்டு நிதிநிலை முடிவுகளை, வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பினோத் குமார் நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில், வங்கியின் மொத்த வணிகம் 14.22 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.15,96,018 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.3,018 கோடியாக இருந்த நிகர லாபம், நடப்பாண்டில் 14.71 சதவீதம் உயர்ந்து ரூ.3,462 கோடியாகப் பதிவாகியுள்ளது. வங்கியின் நிகர வட்டி வருமானம் கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 17.83 சதவீதம் அதிகரித்து ரூ.7,719 கோடியாக உயர்ந்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் சொத்துகள் மீதான வருவாய் (RoA) 1.31 சதவீதமாகவும், பங்கு மூலதனம் மீதான வருவாய் (RoE) 19.65 சதவீதமாகவும், கடன்கள் மீதான வருவாய் 8.17 சதவீதமாகவும் இருந்தது.

வங்கியின் மொத்தக் கடன்கள் 16.39 சதவீதம் அதிகரித்து ரூ.7,21,982 கோடியாக உயர்ந்துள்ளன. கடந்த ஆண்டு இதே காலாண்டில் மொத்தக் கடன்கள் ரூ.6,20,324 கோடியாக இருந்தன. சில்லறை, விவசாயம் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆகிய துறைகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் 17.74 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.4,42,302 கோடியாக அதிகரித்துள்ளன. வங்கியின் மொத்த உள்நாட்டுக் கடன்களில் இம்மூன்று பிரிவுகளின் பங்களிப்பு 67.04 சதவீதமாக உள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், சில்லறைக் கடன்கள் 17.37 சதவீதமும், விவசாயக் கடன்கள் 17.18 சதவீதமும், எம்.எஸ்.எம்.இ. கடன்கள் 19.06 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளன. இதேபோல், வீட்டுக் கடன்கள் உள்ளிட்ட அடமானக் கடன்களும் 12.33 சதவீதம் அதிகரித்துள்ளன. வங்கியின் மொத்த வைப்புத்தொகை கடந்த ஆண்டின் செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 12.50 சதவீதம் அதிகரித்து ரூ.8,74,036 கோடியாக உயர்ந்துள்ளது. நடப்புக் கணக்கு வைப்புத்தொகை 27.48 சதவீதமும், சேமிப்புக் கணக்கு வைப்புத்தொகை 11.55 சதவீதமும், காசா வைப்புத்தொகை 13.77 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளன.

இதே போல், வங்கியின் சொத்துத் தரமும் மேம்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் 2.60 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் விகிதம், நடப்பாண்டின் செப்டம்பர் காலாண்டில் 99 அடிப்படைப் புள்ளிகள் குறைந்து 1.61 சதவீதமாகச் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் 0.16 சதவீதமாக இருந்த நிகர வாராக்கடன் விகிதம், நடப்பாண்டில் 2 அடிப்படைப் புள்ளிகள் குறைந்து 0.14 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். வங்கி ரிசர்வ் வங்கியின் ரொக்க இருப்பு விகிதம் அதிகரிப்பால், கடன் வழங்குவதில் சிறிய அளவில் தாக்கம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


முந்தைய செய்தி
Flight-ல போறீங்களா? இந்த 'Power Bank'-க்கு இனி No Entry!
அடுத்த செய்தி
போரில் கைகொடுக்காத Starlink: உக்ரைன் புகார்!

தொடர்புடைய செய்திகள்