ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 1.35 லட்சம் ஏக்கரில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்டவைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த பயிர்களை காப்பாற்ற 15 நாளுக்கு 3டிஎம்சி தண்ணீர் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கோபி நீர்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளரிடம் கீழ்பாவனி விவசாயிகள் சங்க தலைவர் சி.நல்லசாமி, சுதந்திராசு ஈவிகே சண்முகம் தலைமையிலான விவசாயிகள் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்ட அணைகளில் இருந்து நீரைப் பெற்று, கீழ்பவானி திட்டத்தில் பாசனத்துக்கு திறக்க வேண்டும். கீழ்பவானி திட்ட அணையில் 13 டிஎம்சிக்கும் அதிகமாக நீர் இருக்கிறது. இந்த நீரை சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை காப்பாற்ற உடனடியாக திறந்து விட வேண்டும்.
மேலும், பயிர்களின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, தேவையான 3 டிஎம்சி நீரை 15 நாளுக்குள் திறக்க நீர்வளத் துறை அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.