Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

திருச்சியில் ஜிப்சம், நெய்வேலியில் மெலன்டரைட் கண்டுபிடிப்பு

திருச்சியில் ஜிப்சம்,  நெய்வேலியில் மெலன்டரைட் கண்டுபிடிப்பு
திருச்சியின் வறண்ட புவியியல் நிலப்பரப்பில் ஜிப்சம் என்ற கனிமம் கண்டறியப்பட்டதற்கான ஆய்வு வரைபடம்.

மெலன்டரைட் மற்றும் ஜிப்சம் ஆகிய இரண்டும் நீரைக் கொண்ட கந்தக அமில உப்புக் கனிமங்களாகும்.

பகிரவும் WhatsApp Facebook

செவ்வாய் கிரகத்தின் புவியியல் வரலாற்றையும், அங்கு கடந்த காலங்களில் நீர் இருந்ததற்கான சாத்தியக்கூறுகளையும் புரிந்துகொள்ள உதவும் முக்கியக் கனிமங்களை நெய்வேலி மற்றும் திருச்சி நிலப்பரப்பில் ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.


மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நெய்வேலியில் மெலன்டரைட் என்ற கனிமமும், திருச்சியின் வறண்ட புவியியல் நிலப்பரப்பில் ஜிப்சம் என்ற கனிமமும் கண்டறியப்பட்டுள்ளன. கேரளப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை ஆய்வுக் குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வுக் குழுவுக்கு டாக்டர் சஜின் குமார் கே.எஸ். தலைமை வகித்தார். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன் செயல்படும் லேசர் ராமன் நிறமாலை ஆய்வுக் கருவி மூலம் கனிமங்களின் தனித்துவமான நிறமாலைப் பண்புகள் ஆய்வு செய்யப்பட்டு அவை உறுதி செய்யப்பட்டன.

மெலன்டரைட் மற்றும் ஜிப்சம் ஆகிய இரண்டும் நீரைக் கொண்ட கந்தக அமில உப்புக் கனிமங்களாகும். இவை பாறைகளுக்கும் நீருக்கும் இடையே நிகழ்ந்த வேதியியல் மாற்றங்களைப் பதிவு செய்கின்றன. ஜிப்சம், கடந்த காலங்களில் நீர் இருந்த சூழலுக்கான ஆதாரங்களை வழங்குகிறது. மெலன்டரைட், கந்தகச் சேர்மங்களைக் கொண்ட கனிமங்கள் ஆக்சிஜனுடன் வினைபுரிவதன் மூலம் உருவாகும் குறுகிய கால ஈரமான, அமிலத்தன்மை கொண்ட சூழல்களைச் சுட்டிக்காட்டுகிறது.

இத்தகைய வேதியியல் செயல்முறைகள் செவ்வாய் கிரகத்தில் நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படும் மாற்றங்களுடன் ஒத்ததன்மைகளைக் கொண்டுள்ளன. இதனால், பூமியில் உள்ள இந்த நிலப்பரப்புகள் செவ்வாய் கிரகத்தின் புவியியல் அமைப்பை ஆய்வு செய்வதற்கான ஒப்புமை ஆய்வுத் தளங்களாக முக்கியத்துவம் பெறுகின்றன.

ஜிப்சம் போன்ற கனிமங்களின் கட்டமைப்பில் உயிரியல் செயல்பாடுகளுக்கான தடயங்கள் பாதுகாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் கடந்த காலங்களில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருந்ததா என்பதை ஆராய முடியும்.


முந்தைய செய்தி
புதிய வசதியை அறிமுகப்படுத்தும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்: ட்ரூகாலர் செயலிக்கு வந்த புது சிக்கல்!
அடுத்த செய்தி
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்: பிரேமலதா விஜயகாந்த்

தொடர்புடைய செய்திகள்