Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் - ரூ.50 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிப்பு

அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் - ரூ.50 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிப்பு
பகிரவும் WhatsApp Facebook

கிராஃப்ட் காகிதத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி, அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் இரண்டாவது நாளாகத் தொடர்ந்தது. இதனால், நாளொன்றுக்கு ரூ.25 கோடி வீதம், இரண்டு நாட்களில் ரூ.50 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

பொருட்களை பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்கும், பல்வேறு பயன்பாடுகளுக்கும் அட்டைப்பெட்டிகள் இன்றியமையாததாக உள்ளன. இவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செயல்படுகின்றன. இத்தொழில் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அட்டைப்பெட்டி தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருளான கிராஃப்ட் காகிதத்தின் விலை, கடந்த 60 நாட்களில் டன்னுக்கு ரூ.8,000 உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அட்டைப்பெட்டிகளின் விலையை 25 சதவீதம் உயர்த்தியபோதிலும், தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.
மூலப்பொருளின் எதிர்பாராத விலை உயர்வு அட்டைப்பெட்டித் தொழிலைப் பாதிப்பதுடன், பல்வேறு பொருட்களின் விலை உயர்வுக்கும் மறைமுகக் காரணமாக அமையும் என உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கிராஃப்ட் காகிதத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி, தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கோவை மண்டலம் சார்பில் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இந்த வேலைநிறுத்தத்தால் நாளொன்றுக்கு ரூ.25 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.50 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு உடனடியாகத் தலையிட்டு கிராஃப்ட் காகிதத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என அட்டை பெட்டடி உற்பத்தியாளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி
ரூ.25,000 கோடிக்கு அரசு பத்திரங்களை விற்க ஆர்பிஐ திட்டம்
அடுத்த செய்தி
தார்ப்பாலின், நிழல்வலை திருச்சியில் 20 சதவீதம் வரை விலை உயர்வு

தொடர்புடைய செய்திகள்