Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை; இடைத்தேர்தலுக்கு அவரே காரணம்: அமைச்சர் நிர்மல்குமார்

எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை; இடைத்தேர்தலுக்கு அவரே காரணம்: அமைச்சர் நிர்மல்குமார்

எடப்பாடி பழனிசாமி அதிமுகவை தனது சொந்த கட்சியாக மாற்றிவிட்டார்.

பகிரவும் WhatsApp Facebook

மாநிலத்திற்கான மின்சார கொள்முதல் அளவு குறைந்துள்ளதாக அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

எடப்பாடி பழனிசாமி அதிமுகவை தனது சொந்த கட்சியாக மாற்றிவிட்டார். எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த கட்சியை எடப்பாடி பழனிசாமியும், அவரது மகனும் தங்களிடம் வைத்துக் கொண்டனர் என்ற எனது கருத்தில் ஒரு தவறும் இல்லை. அக்கட்சி தொண்டர்கள் அதிருப்தியில் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். அதிமுகவையும், அதன் சொத்துகளையும் திமுகவிடம் அடகு வைக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை. அவரது முடிவால்தான் இடைத்தேர்தல் வந்தது. அதிமுக எம்எல்ஏக்களில் பாதி பேர் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். அதிமுக இந்த நிலைக்கு சென்றதற்கு எடப்பாடி பழனிசாமியின் சுயநலமே காரணம்.

மின்சாரம் வாங்குவது தொடர்பாக நீண்ட கால ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அக்டோபர் மாதம் முதல் 2,000 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் தேசிய தொகுப்பில் இருந்து வரவேண்டிய 3,000 மெகாவாட் வரவில்லை. அதனால் காஸ் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் வாங்க வேண்டியுள்ளது. மேற்கு வங்க அரசும் 1,500 மெகாவாட் மின்சாரத்தை யூனிட் ரூ.30-க்கும் அதிகமான விலையில் வாங்கி உள்ளது. இதேபோல ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களும் வாங்குகின்றன. எரிவாயு மூலம் பெறப்படும் மின்சாரத்தின் உற்பத்தி விலையே ஒரு யூனிட்டிற்கு ரூ.29.

மழை காரணமாக மின்தேவை குறைந்துள்ளதால் தற்போது 200 மெகாவாட்டிற்கும் குறைவாகவே மின்சாரம் வாங்கி வருகிறோம். வடகிழக்கு பருவ மழையையொட்டி புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள 14 மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் நடந்து வருகிறது. தவெக அரசு கடந்த மாதம் ஸ்மார்ட் மீட்டர் தொடர்பான ஒப்பந்தம் கோரியது. இதில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்த முடிவு செய்து ஒப்பந்தத்தை 2 மாதம் தள்ளி வைத்துள்ளோம். இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

முந்தைய செய்தி
பூமியின் முதல் உயிர்களின் கதை சொல்லும் கற்கள் - அழியும் அபாயத்தில் அரிய சுவடுகள்
அடுத்த செய்தி
US itself buying diesel from Russia: Former diplomat Fabian

தொடர்புடைய செய்திகள்