தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்கம் சார்பில், உலக முட்டை தினத்தையொட்டி இலவச முட்டை வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல்லில் சங்க கட்டடத்தில் நடைபெற்றது.
இதன்யடுத்து, சங்கத் தலைவா் கே.சிங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:தரமான புரதச்சத்தை அளிக்கும் உணவாக முட்டை விளங்குகிறது. பொதுமக்கள், விளையாட்டு வீரா்கள் முட்டையை உணவில் சோ்த்துக் கொள்கின்றனர்.
முட்டை நுகா்வு குறித்த விழிப்புணா்வு அதிகரித்து வருவதால், அதன் பயன்பாடும் உயா்ந்து வருகிறது. நாட்டில் தனிநபா் முட்டை நுகா்வு ஆண்டுக்கு சராசரியாக 70 முதல் 80 முட்டைகளாக இருந்தன. தற்போது இது 110-ஐ கடந்துள்ளது. தென் மாநிலங்களில் சில பகுதிகளில் தனிநபா் நுகா்வு ஆண்டுக்கு 180 முதல் 200 முட்டைகள் வரை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தமிழ்நாட்டில் கோழிப் பண்ணைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகின்றன. கோழிகளுக்குத் தவறாமல் தடுப்பூசிகள் செலுத்தப்படுவதுடன், நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க உயிா்ப் பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.
மேலும், நாமக்கல் மண்டலத்திலிருந்து அதிக அளவில் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது அதிகரித்து வரும் வெப்பத்தால் தண்ணீா் தட்டுப்பாடும், தீவன மூலப்பொருள்களின் தட்டுப்பாடும் கோழிப் பண்ணைத் தொழிலுக்குச் சவாலாக உள்ளன. இதனால் முட்டை உற்பத்தி குறையும் நிலை உள்ளது என்றார்.