தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட குவைத் ஏர்வேஸ் விமானம், பராமரிப்புப் பணிகளுக்குப் பின் மீண்டும் குவைத்துக்குப் புறப்பட்டுச் சென்றது.
குவைத்தில் இருந்து கேரளா வந்த குவைத் ஏர்வேஸ் விமானம் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது பறவை மோதியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இதையடுத்து, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டதால், பயணிகளின் பாதுகாப்பைக் கருதி அந்த விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.
பயணிகள் அனைவருக்கும் மாற்று விமான ஏற்பாடுகல் செய்யப்பட்டன. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர்.
முழுமையான சோதனைக்குப் பிறகு, விமானம் மீண்டும் பறப்பதற்குத் தகுதியானது என்று தொழில்நுட்ப வல்லுநர்களால் சான்றளிக்கப்பட்டதால், விமானம் குவைத்துக்குப் புறப்பட்டுச் சென்றது.