திருச்சி:
தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு இரண்டு கூடுதல் சிறப்பு விமானங்களை இயக்க உள்ளதாக ஸ்கூட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, நவம்பர் 3-ஆம் தேதி செவ்வாய்க்கிழமையும், நவம்பர் 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் இந்தச் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் தீபாவளி காலத்தில் சொந்த ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணம் செய்யத் திட்டமிடும் பயணிகளுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும்.
இரு தேதிகளிலும் திருச்சி – சிங்கப்பூர் இடையிலான விமானம் (TR 753) இரவு 7.05 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 1.55 மணிக்கு சிங்கப்பூர் சென்றடையும். சிங்கப்பூர் – திருச்சி விமானம் (TR 752) மாலை 4.25 மணிக்குப் புறப்பட்டு, மாலை 6.05 மணிக்கு திருச்சியை வந்தடையும்.