Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

விசாகப்பட்டினம் ஏஐ மையம் - கூகுள் விளக்கம்

விசாகப்பட்டினம் ஏஐ மையம் - கூகுள் விளக்கம்

ஏஐ மையத்துக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பகிரவும் WhatsApp Facebook

கூகுள் நிறுவனம் 15 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.1.25 லட்சம் கோடி) முதலீட்டில் விசாகப்பட்டினத்தில் அமைத்து வரும் ஏஐ மையத்துக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தொடர்பாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

சுமார் 600 ஏக்கர் பரப்பில் அமைக்கப்படும் இந்த மையத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் விவசாய நிலங்களும், மாந்தோப்புகளும் அடங்கும் என்றும் தெரிவித்தும், இதனால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழப்பதாகவும் தெரிவித்து, அப்பகுதி வேளாண் பெருமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஏஐ மையத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


மேலும், இதுபோன்ற மையங்களுக்காக லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் பயன்படுத்தப்படும் என்பதால், இப்பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு உருவாகும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர் . இவ்வளவு பெரிய முதலீட்டில் மையம் அமைத்தாலும், உள்ளூர் மக்களுக்கு போதிய அளவில் வேலைவாய்ப்பு கிடைக்காது என்றும் அதிருப்தி தெரிவித்தனர்.


இந்த விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், கூகுள் நிறுவனஆசிய-பசிபிக் பிராந்திய கட்டமைப்பு மற்றும் எரிசக்தித் துறைத் தலைவர் அலெக்சாண்டர் ஸ்மித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்களின் கவலைகளை நிறுவனம் கருத்தில் கொள்கிறது. இப்பகுதியில் நிலவும் குடிநீர்ப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, வழக்கமான நீர் குளிரூட்டும் அமைப்புகளுக்குப் பதிலாக, அதிநவீன காற்று குளிரூட்டும் தொழில்நுட்பமே பயன்படுத்தப்படும்.


பிற தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் நீரில் 120 சதவீதத்தை 2030-ம் ஆண்டுக்குள் பூமிக்கே திருப்பி வழங்கும் வகையில், மறுசுழற்சி உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான கட்டுமானக் காலத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 4,200 பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 2028-ம் ஆண்டுக்குள் இம்மையத்தை முழுமையாக செயல்பாட்டிற்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி
சுஸ்லான் பங்குக்கு ரூ.65 இலக்கு நிர்ணயம்
அடுத்த செய்தி
அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் இருவருக்கு நோபல் பரிசு

தொடர்புடைய செய்திகள்