Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

எகிறிய தக்காளி, வெங்காயம் விலை - மக்கள் கலக்கம்

எகிறிய தக்காளி, வெங்காயம் விலை - மக்கள் கலக்கம்

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி மற்றும் பெரிய வெங்காயம் விலை மளமளவென உயர்ந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி மற்றும் பெரிய வெங்காயம் விலை மளமளவென உயர்ந்துள்ளது.

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக 60 லோடுகள் தக்காளி வரும் நிலையில், தற்போது 35 லோடு மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தக்காளி விலை உயர்ந்துள்ளது.
கடந்த 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை கிலோ ரூ.25 முதல் ரூ.40 வரை விற்ற தக்காளி, 4-ம் தேதி ரூ.40 முதல் ரூ.50 வரையும், அக். 5-ம் தேதி முதல் ரூ.60 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.


கோயம்பேடு காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.முத்துக்குமார் கூறும்போது, "வறட்சியால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, தக்காளி வரத்து குறைந்துள்ளது. வரத்து மேலும் குறைந்தால், தக்காளியின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சின்ன வெங்காயம் விலையில் கடந்த 1-ம் தேதி முதல் நேற்று வரை பெரிய மாற்றம் இல்லை. கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது" என்றார்.


இதனிடையே, தக்காளியைப் போல பெரிய வெங்காயத்தின் விலையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை கோயம்பேட்டில் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையானது. கடந்த 4-ம் தேதி முதல் நேற்று வரை ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனையானது. ரகத்தைப் பொறுத்து ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60 வரை விற்பனையாகிறது. விலை உயர்வு காரணமாக ஏழை, நடுத்தர மக்கள் கவலைக்குள்ளாகி உள்ளனர்.



தேதி  தக்காளி  பெரிய வெங்காயம்  சின்ன வெங்காயம்

அக்.1  
ரூ.25–40       ரூ.40–50                        ரூ.70–100

அக்.2  ரூ.25–40       ரூ.40–50                        ரூ.70–100

அக்.3  ரூ.25–40       ரூ.40–50                         ரூ.70–100

அக்.4   ரூ.40–50       ரூ.40–60                         ரூ.70–100

அக்.5   ரூ.60             ரூ.40–60                         ரூ.70–100

அக்.6   ரூ.60             ரூ.40–60                         ரூ.70–100

அக்.7   
ரூ.60             ரூ.40–60                         ரூ.70–100

அக்.8   ரூ.60             ரூ.40-60                           ரூ.70-100


முந்தைய செய்தி
China nominates health official to lead WHO
அடுத்த செய்தி
விமான கட்டணம் திடீர் உயர்வு - எவ்வளவு பாருங்க..

தொடர்புடைய செய்திகள்