Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மல்லி, முல்லை கிலோ ரூ.300-க்கு விற்பனை

மல்லி, முல்லை கிலோ ரூ.300-க்கு விற்பனை

பண்டிகைககளின்போது மட்டுமே பூக்கள் அதிக விலைக்கு விற்கும்.

பகிரவும் WhatsApp Facebook

திருச்சி காந்தி மார்க்கெட்டில் கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த தினங்களையொட்டி ரூ.1,000-க்கு மேல் விற்பனையான பூக்கள் விலை, புரட்டாசி மாதம் முதல் படிப்படியாக குறையத் தொங்கியது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மல்லி ரூ.200, முல்லை ரூ.200, ரோஜா ரூ.120-க்கு விற்பனையானது. நேற்று மல்லி ரூ.300, முல்லை ரூ.300, ஜாதிமல்லி ரூ.400, செவ்வந்தி ரூ.100-150, கனகாம்பரம் ரூ.400, ரோஜா ரூ.150, சம்பங்கி ரூ.80, பிச்சிபூ ரூ.100, பன்னீர்ரோஸ் ரூ.120, மரிக்கொழுந்து ரூ.30, மாசிபச்சை ரூ.30-க்கு விற்பனையானது.


மகாளய அமாவாசை மற்றும் புரட்டாசி சனிக்கிழமை என்பதால் நேற்று காலை முதல் காந்தி மார்க்கெட் பூ கமிஷன் மண்டியில் வியாபாரிகளும், பொதுமக்களும் ஆர்வமுடன் பூக்கள் வாங்கிச் சென்றனர். இதுகுறித்து மலர்கள் வியாபாரி கே.அசைன் கூறும்போது,

 "முகூர்த்த நாட்கள், கோயில் விழா, விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைககளின்போது மட்டுமே பூக்கள் அதிக விலைக்கு விற்கும். மற்ற நாட்களில் சாதாரண விலைக்கு விற்கும். மகாளய அமாவாசை என்பதால் நேற்று முன்தினத்தைவிட தற்போது பூக்கள் விலை சற்று உயர்ந்துள்ளது. புரட்டாசிக்குப் பிறகே பூக்கள் விலை அதிகமாக உயரும்" என்றார்.

முந்தைய செய்தி
"War will end Iran war either through battle" or through deal: Trump
அடுத்த செய்தி
Trump again takes credit for India-Pakistan ceasefire in Nobel Prize claim

தொடர்புடைய செய்திகள்