சென்னை:
அறுபடை வீடு முருகன் கோயில்கள், கேரளம் மாநிலம் ஆன்மிகத் தலங்கள் உள்ளடக்கிய சிறப்பு சுற்றுலா ரயில் வரும் 13-ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது.தனியார் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆன்மிக சுற்றுலா ரயிலில் பயணிக்க விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த சிறப்பு ரயில் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய தலங்களுக்கு பக்தர்கள் செல்ல முடியும்.
மேலும், கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில், சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயிலும் இந்த சுற்றுலா திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
ரயிலில் 2-ம் வகுப்பு ஏசிக்கு ரூ.25,880, 3-ம் வகுப்பு ஏசிக்கு ரூ.22,500, ஸ்லீப்பர் வகுப்புக்கு ரூ.14,500 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ஆன்மிக சுற்றுலா ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு www.tourtimes.in இணையதளத்தில் செய்து கொள்ளலாம்.