Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இந்திய ஜவுளி நிறுவன பங்குகள் 6% உயர்வு

இந்திய ஜவுளி நிறுவன பங்குகள் 6% உயர்வு

வலுவான பிராண்டுகள் மற்றும் வாடிக்கையாளர்களுடனான நேரடித் தொடர்பு ஆகியவை வளர்ச்சிக்கு உதவும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.

பகிரவும் WhatsApp Facebook

இந்திய ஜவுளி நிறுவனங்களின் பங்குகள் புதன்கிழமை வர்த்தகத்தில் 6% வரை உயர்ந்தன. உலகச் சந்தையில் ஜவுளிப் பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பும், ஏற்றுமதி ஆர்டர்கள் மேம்பட்டு வருவதும் இந்த உயர்வுக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.


இந்தோ கவுண்ட் இண்டஸ்ட்ரீஸ், கோகல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ், பிடிஎஸ், ஃபிலாடெக்ஸ் இந்தியா மற்றும் பேர்ல் குளோபல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 3% முதல் 6% வரை உயர்ந்தன. இந்தோ கவுண்ட் நிறுவனம் 2028-ம் ஆண்டுக்குள் ரூ.8,000 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. புதிய வணிகங்கள் மூலம் 275 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டவும் திட்டமிட்டுள்ளது. தரமான பொருட்கள், வலுவான பிராண்டுகள் மற்றும் வாடிக்கையாளர்களுடனான நேரடித் தொடர்பு ஆகியவை வளர்ச்சிக்கு உதவும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.

மோதிலால் ஓஸ்வால் நிதிச் சேவை நிறுவன கணிப்பின்படி, நடப்பு ஆண்டில் ஜவுளித் துறையின் தேவை நடுப்பகுதி அளவில் இரட்டை இலக்கத்தில் வளரக்கூடும். 2026–28 காலகட்டத்தில் ஆய்வுக்கு உட்பட்ட நிறுவனங்களின் வருவாய் ஆண்டுக்கு சராசரியாக 14%, செயல்பாட்டு லாபம் 27%, நிகர லாபம் 38% வளர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 கோகல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ், பேர்ல் குளோபல், அரவிந்த் ஆகியவை ஆடைத் தயாரிப்புப் பிரிவிலும், இந்தோ கவுண்ட் வீட்டு உபயோக ஜவுளிப் பிரிவிலும் விருப்பமான நிறுவனங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி
Additional Pooja Festival Special Trains
அடுத்த செய்தி
கூட்டுறவு வங்கிகளில் கடன்: தகவல் பெற WhatsApp எண் அறிவிப்பு

தொடர்புடைய செய்திகள்