அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 21.3 சதவீதம் உயர்ந்து ரூ.1,501 கோடியாக உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,238 கோடியாக இருந்தது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் நிகர விற்பனை 18.9 சதவீதம் அதிகரித்து ரூ.23,024 கோடியாக உயர்ந்துள்ளது.
உள்நாட்டு சாம்பல் சிமென்ட் விற்பனை அளவு 13.8 சதவீதம் அதிகரித்து 3.594 கோடி டன்னாக உள்ளது. இருப்பினும், மூலப்பொருள் செலவுகள் அதிகரித்தது நிறுவனத்தின் லாப வளர்ச்சிக்கு சவாலாக அமைந்தது.