Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பிடிசி இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 7% உயர்வு - நிறுவனத்தின் நெக்ஸ்ட் மூவ்?

பிடிசி இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 7% உயர்வு - நிறுவனத்தின் நெக்ஸ்ட் மூவ்?

பிடிசி இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 7 சதவீதம் உயர்ந்தன.

பகிரவும் WhatsApp Facebook

தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கான பங்கு வெளியீட்டைத் தொடங்கியதைத் தொடர்ந்து, பிடிசி இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 7 சதவீதம் உயர்ந்தன. இதன்மூலம் ரூ.1,800 கோடி வரை திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நேற்று முன்தினம் (அக். 6) தொடங்கப்பட்ட இந்த வெளியீட்டில், பங்கு ஒன்றின் குறைந்தபட்ச விலை ரூ.22,150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் அதிகபட்சமாக 5 சதவீதம் தள்ளுபடி வழங்கவும் நிறுவனத்துக்கு அனுமதி உள்ளது.


திரட்டப்படும் நிதி, கடனைத் திருப்பிச் செலுத்தவும், துணை நிறுவனமான ஏரோலாய் டெக்னாலஜீஸின் நடைமுறை மூலதனத் தேவைகள் மற்றும் இயந்திரங்கள் வாங்குவதற்கும் பயன்படுத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


டிராக் பிரிசிஷன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திலும் முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. பிடிசி இண்டஸ்ட்ரீஸ், விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்கான பாகங்களைத் தயாரித்து வருகிறது.

முந்தைய செய்தி
பங்குகள்: பேலன்ஸ் தடுமாறும் - நிபுணர்கள் அட்வைஸ்!
அடுத்த செய்தி
ஈரோடு: மஞ்சள் விலை ஒரே வாரத்தில் குவிண்டாலுக்கு ரூ.1,700 அதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்