வைட்டமின் கே குறைபாட்டால் ஏற்படும் ரத்த உறைதல் பிரச்சினைகளுக்கான லூபின் நிறுவனத்தின் மருந்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (யுஎஸ்எப்டிஏ) ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான லூபின், ‘பைட்டோனாடையோன்’ (Phytonadione) ஊசி மருந்துக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த மருந்து 1 மி.கி./0.5 மி.லி. அளவிலான, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய முன்நிரப்பப்பட்ட ஊசி வடிவில் தயாரிக்கப்படுகிறது. வைட்டமின் கே குறைபாட்டால் ஏற்படும் ரத்த உறைதல் குறைபாடு மற்றும் ரத்தப்போக்கு பிரச்சினைகளைத் தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் இந்த மருந்து பயன்படுகிறது.
ஐக்யூவிஐஏ தரவுகளின்படி, 2026 ஆகஸ்ட் வரையிலான ஓராண்டில் அமெரிக்காவில் இவ்வகை மருந்தின் விற்பனை மதிப்பு 5.23 கோடி டாலராக இருந்ததாக லூபின் நிறுவனம் தெரிவித்துள்ளது.