லீலா பேலசஸ் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு ஒருங்கிணைந்த நிகர லாபம் 26.6 சதவீதம் உயர்ந்து ரூ.94.6 கோடியானது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.74.72 கோடியாக இருந்தது. செயல்பாடுகள் மூலமான மொத்த வருமானம் ரூ.333.45 கோடியிலிருந்து ரூ.418 கோடியாக அதிகரித்தது.
மொத்தச் செலவுகள் ரூ.172.71 கோடியிலிருந்து ரூ.224.14 கோடியாக உயர்ந்தன. தனிநபர், நிறுவன மற்றும் சுற்றுலாப் பயணிகளின் தேவை பரவலாக அதிகரித்ததாக தலைமைச் செயல் அதிகாரி அனுராக் பட்நாகர் தெரிவித்தார்.
ஆடம்பர அறைகளுக்கான வலுவான தேவையும், முக்கிய நிகழ்வுகளின்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திறனும் வளர்ச்சிக்கு உதவியதாக அவர் கூறினார். இந்திய ஆடம்பர விடுதிச் சந்தையின் வளர்ச்சியும் சாதகமாக அமைந்தது.